தோனி - கோலி - பாண்டிங் - லாரா PT
கிரிக்கெட்

டாப் 5 உலக பணக்கார கிரிக்கெட் வீரர்கள்| முதலிடத்தில் இந்திய வீரர்.. ஆனால் தோனியோ, கோலியோ இல்லை!

தற்போதைய உலக பணக்கார கிரிக்கெட் வீரர் யார் என்ற பட்டியலில் முதல் 5 இடத்தில் மூன்று இடங்களை இந்திய வீரர்கள் பிடித்து அசத்தியுள்ளனர்.

Rishan Vengai

இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள், கலாச்சார நிகழ்ச்சிகள் என வெவ்வேறு கொண்டாட்ட வடிவங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்த இந்திய மக்களால் திருவிழா போல கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு என்றால் அது கிரிக்கெட் மட்டும் தான். இந்திய மக்களின் உணர்வோடு ஒன்றிய கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கும் வீரர்கள், இங்கு ஹீரோவை போலவும் கடவுளை போலவும் நடத்தப்படுகிறார்கள்.

MS Dhoni

இந்நிலையில், இந்தியாவில் கிரிக்கெட் என்பது விரும்பி விளையாடும் விளையாட்டாகவும், அதிகம் பின்பற்றப்படும் விளையாட்டாகவும் இருப்பதால், வீரர்கள் அதிகப்படியான வருமானத்தை ஈட்டுகிறார்கள். சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் நிகழ்வுகள், கிரிக்கெட் லீக்குகள், விளம்பரங்கள், விருந்தினர் தோற்றங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் நிறைய பணம் சம்பாதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

virat kohli - rohit sharma

அதுவும் ஐபிஎல் போன்ற ஒரு கிரிக்கெட் தொடர் பணத்தை கொட்டும் குபேரனாக மாறியுள்ள நிலையில், உலக பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியலில் 3 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்களுடன் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா இவரும் டாப் 5 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

5. பிரையன் லாரா

lara

பிசினஸ் இன்சைடரின் கூற்றுப்படி, உலக பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா இருக்கிறார். அவரின் நிகர மதிப்பு சுமார் 60 மில்லியன் (இந்திய ரூபாயில் 500 கோடி) ஆகும். 'டிரினிடாட் இளவரசர்' என்று அன்புடன் அழைக்கப்படும் பிரையன் லாரா, தனது பேட்டிங் ஸ்டைல் ​​மற்றும் கிரிக்கெட் சாதனைகளுக்காக அறியப்படுகிறார்.

4. ரிக்கி பாண்டிங்

எல்லா காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக நினைவுகூரப்படும் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங், உலக பணக்கார கிரிக்கெட்டர்கள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார். பாண்டிங்கின் நிகர சொத்து மதிப்பானது சுமார் 70 மில்லியன் (இந்திய ரூபாயில் 600 கோடி) ஆகும்.

ரிக்கி பாண்டிங்

பிசினஸ் இன்சைடர் அறிக்கையானது ரிக்கி பாண்டிங்கை உலகின் நான்காவது பணக்கார கிரிக்கெட் வீரராக பட்டியலிட்டுள்ளது. பாண்டிங்கின் தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தொடர்ந்து இரண்டு ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைகளை (2003 மற்றும் 2007) வென்றது குறிப்பிடத்தக்கது.

3. விராட் கோலி

பிசினஸ் இன்சைடர் அறிக்கையின்படி, உலகின் மூன்றாவது பணக்கார கிரிக்கெட் வீரராக விராட் கோலி இருக்கிறார். அதிகப்படியான ரசிகர்களை வைத்திருக்கும் விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு சுமார் 92 மில்லியன் (இந்திய ரூபாயில் 800 கோடி) ஆகும்.

விராட் கோலி

இவர் தனது சொத்துமதிப்பை சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட், IPL, ஒப்பந்தங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலமும், உடன் அவரது உணவகங்கள் மற்றும் வணிக முயற்சியான One8 கம்யூனில் விளையாடுவது உட்பட பலவற்றின் மூலம் ஊதியத்தை சம்பாதிக்கிறார்.

2. மகேந்திர சிங் தோனி

இந்தப் பட்டியலில் இரண்டாவது உலக பணக்கார கிரிக்கெட்டராக இருப்பது 'கேப்டன் கூல்' என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி. அவரின் நிகர மதிப்பு 111 மில்லியன் (இந்திய ரூபாலியில்1000 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. MS தோனி மிகவும் வெற்றிகரமான இந்திய கிரிக்கெட் கேப்டன்களில் ஒருவர், அவருடைய தலைமையில் தான் இந்திய அணி மூன்று உலகக் கோப்பைகளை வென்றது!

தோனி

அவர் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், தோனி ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார், மேலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

1. சச்சின் டெண்டுல்கர்

உலக பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலின் முதலிடத்தில் யார் இருப்பார்கள் என்ற கேள்வி எல்லோருக்கும் இருந்திருக்கும். பிசினஸ் இன்சைடரின் படி, 'கிரிக்கெட்டின் கடவுள்' என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் உலக பணக்கார கிரிக்கெட் வீரராக முதலிடம் பிடித்துள்ளார்!

சச்சின்

20 ஆண்டுகளுக்கும் மேலான கிரிக்கெட் வாழ்க்கையுடன், டெண்டுல்கர் உலகின் எல்லா காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவருடைய நிகர மதிப்பானது 170 மில்லியன் (இந்திய ரூபாயில் 1500 கோடி) ஆகும். இது அவரை உலகத்தில் நம்பர் 1 பணக்காரராக ஆக்குகிறது.

சச்சின் டெண்டுல்கர்

அறிக்கைகளின்படி, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலம் சம்பாதிக்கிறார், பெங்களூரில் உள்ள சச்சின்ஸ் மற்றும் டெண்டுல்கர்ஸ் என்ற உணவகங்கள், ஸ்மாஷ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட வணிக முயற்சிகளுடன் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து வருமானம் ஈட்டுகிறார்.