கங்குலியின் வெற்றிக் கொண்டாட்டம் pt web
கிரிக்கெட்

22 ஆண்டுகள்; லார்ட்ஸ் மைதானத்தில் ’தாதா’ கங்குலியின் ஆக்ரோஷ கொண்டாட்டம் அரங்கேறிய மறக்கமுடியாத நாள்!

NatWest முத்தரப்பு தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தினை வீழ்த்தி கோப்பையை வென்றது.

Angeshwar G

NatWest 

இந்தியா, இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரான நாட்வெஸ்ட் (NatWest) தொடர் 2002 ஆம் ஆண்டு 27 ஜூன் முதல் 13 ஜூலை வரை நடைபெற்றது.

இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற இரு அணிகளுடன் மூன்று முறை மோத வேண்டும். அதாவது 6 போட்டிகள். இறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும். இறுதிப் போட்டியையும் சேர்த்து மொத்தம் 10 போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் நடந்தது.

சச்சின் இந்த தொடரில் தனது 33 ஆவது சதத்தினை பதிவு செய்த போது..

இதில் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 6 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்று 1ல் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி 6ல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து இந்தியா அணிகள் மோதிய ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இலங்கை அணியோ 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வென்று மற்ற 5ல் தோல்வி அடைந்தது.

தொடர் தோல்விகளில் இருந்து மீள வேண்டிய கட்டாயம்

முடிவாக, 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. முன்னதாக, 1998/1999 ஆம் ஆண்டுகளில் நடந்த, இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரை மட்டுமே இந்திய அணி வென்றிருந்தது. அதன்பிறகு நடந்த 9 இறுதிப் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் வென்று கோப்பையையும் வெல்ல வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு. அந்தக் கட்டாயம் கேப்டன் கங்குலிக்கும் இருந்தது.

போட்டியும் ஆரம்பமானது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் நாசர் ஹூசைன் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 325 ரன்களை எடுத்தது. 326 எனும் இமாலய இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.

இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கங்குலி சேவாக் ஜோடி, இந்திய அணிக்கு நிலையான தொடக்கத்தைக் கொடுத்தது. 100 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் கங்குலி 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கங்குலி சென்ற வேகத்திலேயே சேவாக்கும் வெளியேற இந்திய அணி திணற ஆரம்பித்தது. அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்த நிலையில், 147 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து திணறியது. ஆட்டம் கைமீறிப் போய்விட்டது என்று நினைத்த நிலையில், யுவராஜ் சிங், முகமது கைஃப் ஜோடி இணைந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

வெற்றிக்கு சற்றொப்ப வெகு அருகில் சென்றுவிட்ட நிலையில், யுவராஜ் சிங் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முகம்மது கைஃப் களத்தில் இருந்ததால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆனாலும், வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹர்பஜன், கும்ளே என இருவிக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்தது. இறுதிவரை களத்தில் இருந்து போராடிய கைஃப் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். கைஃப் 75 பந்துகளில் 87 ரன்களைக் குவித்திருந்தார். முடிவாக இந்திய அணி 49.3 ஆவது ஓவரில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கங்குலியின் ஆக்ரோஷ கொண்டாட்டம்!

இந்த போட்டியில்தான் கங்குலி தனது Iconic கொண்டாட்டமான டீ சர்ட்டை கழற்றி காற்றில் சுழற்றியது நடந்தது. முன்னதாக அதே ஆண்டில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 3-3 என்று சமன் ஆனது.

இதில் கடைசியாக பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி 6 ஆவது ஒருநாள் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இறுதிப் பந்தில் 5 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில்,இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அப்போது பந்து வீசிய ஃப்ளிண்டாஃப் தனது டீ சர்ட்டை கழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இதற்கு எதிர்வினையாகத்தான் அன்று கங்குலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. ஏனெனில் இந்த போட்டியிலும் ஃபிளிண்டாஃப் தான் இறுதி ஓவரை வீசினார்.

டாடாவின் அன்றைய கொண்டாட்டம் இன்றும் வைரலாகத்தான் இருக்கிறது.