rohit - jaiswal cricinfo
கிரிக்கெட்

அதிவேகமாக 100, 150, 200 ரன்கள்.. ENG, ஆஸி எல்லாம் 4வது, 5வது இடத்தில்! IND படைத்த 2 இமாலய சாதனைகள்!

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு பிரமாண்ட சாதனைகளை படைத்து இந்தியா அசத்தியுள்ளது.

Rishan Vengai

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரண்டு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

IND vs BAN

அதனைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. முதல்நாளில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், இரண்டாவது மற்றும் 3வது நாள் ஆட்டங்கள் மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக நடத்தப்படவில்லை.

ind vs ban test

இந்நிலையில் 4வது நாளான இன்று ஆட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது.

233 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம்..

4வது நாளில் 107/3 என்ற நிலைமையில் தொடங்கிய வங்கதேச அணிக்கு, முஸ்ஃபிகுர் ரஹீமை போல்டாக்கி வெளியேற்றிய பும்ரா விக்கெட்டை எடுத்துவந்தார். அதன்பிறகு வந்த அஸ்வின், சிராஜ் என அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்த, வங்கதேச அணி தடுமாறியது. மீண்டும் பந்துவீச வந்த பும்ரா அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்த அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பும்ரா

அதற்குபிறகு முதல் இன்னிங்ஸில் விளையாடிவரும் இந்திய அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திவருகிறது. இன்னும் ஒருநாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், அதிரடியாக ரன்களை குவித்து வங்கதேசத்தை வீழ்த்தும் முயற்சியில் இந்திய அணி இறங்கியுள்ளது. 28 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை குவித்து விளையாடிவருகிறது இந்தியா. அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ரன்கள் குவித்து வெளியேறினார்.

டெஸ்ட் போட்டியில் அதிவேக 100, 150 ரன்கள்..

முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 3 ஓவர்கள் முடிவிலேயே 51 ரன்களை எட்டி அதிரடி காட்டியது. ரோகித் சர்மா 3 சிக்சர்கள் பறக்கவிட, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 பவுண்டரிகளை விரட்டி மிரட்டிவிட்டார். அடுத்தடுத்து வந்த கில் மற்றும் ரிஷப் பண்ட் அனைவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ரோகித் சர்மா 200 ஸ்டிரைக்ரேட்டில் 23 ரன்கள், ஜெய்ஸ்வால் 141 ஸ்டிரைக்ரேட்டில் 72 ரன்கள், சுப்மன் கில் 36 பந்தில் 39 ரன்கள் என விளாச 10.1 ஓவர் முடிவில் 100 ரன்களை எட்டி இந்தியா சாதனை படைத்தது. இதன்மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 100 ரன்களை அடித்த அணி என்ற இமாலய சாதனையை படைத்தது இந்திய அணி.

ரோகித் சர்மா

அதுமட்டுமில்லாமல் 18.2 ஓவரில் 150 ரன்கள் (இதற்கு முன்பு, 21.1 ஓவர்களில் IND vs WI, 2023), 24.2 ஓவரில் 200 ரன்கள் (இதற்கு முன்பு, 28.1 ஓவர்களில் Aus vs Pak, 2017) என எட்டி, டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 150 ரன்கள் மற்றும் 200 ரன்கள் எட்டிய முதல் அணியாகவும் இந்தியா வரலாறு படைத்துள்ளது.

ஜெய்ஸ்வால்

டெஸ்ட்டில் அதிவேகமாக 100 ரன்கள் அடித்த அணிகள்:

* 10.1 ஓவர்கள் Ind vs Ban, கான்பூர் - 2024

* 12.2 ஓவர்கள் Ind vs WI, போர்ட் ஆஃப் ஸ்பெய்ன் - 2023

* 13.1 ஓவர்கள் SL vs Ban, கொழும்பு - 2001

* 13.4 ஓவர்கள் Ban vs WI, மிர்பூர் - 2012

* 13.4 ஓவர்கள் Eng vs Pak, கராச்சி 2022

* 13.4 ஓவர்கள் Eng vs Pak, ராவல்பிண்டி 2022

* 13.6 ஓவர்கள் Aus vs Ind, பெர்த் - 2012

ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள்..

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இதுவரை இந்தியா 11 சிக்சர்களை அடித்து மிரட்டிவருகிறது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 3 சிக்சர்களை விளாசினார்.

இதன்மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த அணியாக இந்தியா மாறியுள்ளது. 89 சிக்சர்களுடன் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்தை பின்னுக்குதள்ளி சாதனை படைத்துள்ளது.

விராட் கோலி

ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த அணிகள்:

* இந்தியா - 95* சிக்சர்கள் - 2024

* இங்கிலாந்து - 89 சிக்சர்கள் - 2022

* இந்தியா - 87 சிக்சர்கள் - 2021

* நியூசிலாந்து - 81 சிக்சர்கள் - 2014

* நியூசிலாந்து - 71 சிக்சர்கள் - 2013

இந்திய அணி 34.4 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. கே.எல்.ராகுல் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உட்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதுவரை 52 ரன்கள் மட்டுமே இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.