ஜடேஜா cricinfo
கிரிக்கெட்

9 விக்கெட் காலி.. 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி இந்தியா! NZ 143 ரன்கள் முன்னிலை!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியானது 4-வது இன்னிங்ஸை நோக்கி நகர்ந்துள்ளது.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, 2-0 என தொடரை கைப்பற்றி முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது.

இந்நிலையில் எந்த அணியும் இதுவரை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்யாத நிலையில், அதற்கான வாய்ப்புடன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது நியூசிலாந்து.

சாண்ட்னர் - பண்ட்

ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வகையில் 3-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது.

நல்ல நிலைமையில் இருக்கும் இந்தியா..

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி வில் யங் மற்றும் டேரில் மிட்செல்லின் அரைசதத்தின் உதவியால் 235 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் ஜடேஜா 5 விக்கெட்டுகள் மற்றும் வாசிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

will young

அதற்கு பிறகு முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி சுப்மன் கில்லின் 90 ரன்கள் மற்றும் ரிஷப் பண்ட்டின் 60 ரன்கள் உதவியால் 263 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து ஸ்பின்னர் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

jadeja

28 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இரண்டாம் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்துள்ளது. ஜடேஜா (4 விக்கெட்டுகள்) மற்றும் அஸ்வின் (3 விக்கெட்டுகள்) இருவரும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளனர். நியூசிலாந்து அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே மீதமுள்ளதால் விரைவில் விக்கெட்டை வீழ்த்தி சேஸிங் செய்ய இந்தியா காத்திருக்கிறது.

india

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடைசி 6 போட்டிகளில் 4 போட்டியில் வெற்றிபெற வேண்டும் என கூறப்படும் நிலையில், 3வது டெஸ்ட் போட்டியின் வெற்றியை இந்தியா தேடிவருகிறது.

12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் அடைந்த தோல்வியை மறக்கடிக்க வேண்டுமானால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லவேண்டிய இடத்தில் இந்திய அணி இருந்துவருகிறது. WTC சுழற்சியின் கடைசி 5 போட்டிகளில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்த்து விளையாடவிருக்கிறது இந்திய அணி.