மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி படுதோல்வியுடன் தொடங்கியுள்ளது.
டி20 தொடரில் தனது முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து, 20 ஓவர்களின் முடிவில் 160 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய இந்தியா, 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுன் 15 ரன்கள் எடுத்ததே, இந்திய பேட்டரின் அதிகபட்ச ரன்னாக அமைந்தது.
இதன்மூலம், 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றியை ருசித்துள்ளது. கடந்த 10 டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை தழுவியிருந்த நியூசிலாந்து அணி, உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியிலேயே, வலுவான அணிகளில் ஒன்றான இந்திய அணி வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.