விராட் கோலி - சர்பராஸ் கான் web
கிரிக்கெட்

IND vs NZ: ஒரே நாளில் 453 ரன்கள் குவிப்பு.. இறுதி பந்தில் அவுட்டான கோலி! கடைசி நம்பிக்கை சர்ஃபராஸ்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இணைந்து 453 ரன்கள் குவித்துள்ளனர்.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் முழுவதும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் போட்டி நடக்குமா நடக்காதா என்ற இடத்திற்கே சென்றது. ஆனால் பிட்ச் பராமரிப்பாளர்கள் ஆடுகளத்தை விரைவாக சரிசெய்ய, ஆட்டம் இரண்டாம் நாளில் டாஸ் போடப்பட்டு தொடங்கியது.

402 ரன்கள் குவித்த நியூசிலாந்து..

மழையால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்து சொதப்பினார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா. அதன் காரணமாக 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது இந்தியா.

rachin

அதற்குபிறகு முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா (134 ரன்கள்), டெவான் கான்வே (91 ரன்கள்) மற்றும் டிம் சவுத்தீ (65 ரன்கள்) மூன்று பேரின் அதிரடியான ஆட்டத்தால் 402 ரன்களை குவித்தது நியூசிலாந்து.

சதத்தை தவறவிட்ட கோலி!

முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தபிறகு ஜெய்ஸ்வால் 35 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 52 ரன்கள் இருந்தபோது போல்டாகி வெளியேறினார்.

ரோகித் வெளியேறிய பிறகு 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சர்பராஸ் மற்றும் விராட் கோலி இருவரும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். நியூசிலாந்து பவுலர்களை செட்டிலாக விடாமல் இரண்டு வீரர்களும் சிக்சர் பவுண்டரிகளாக விரட்ட, இறுதிநாள் முடிவுவரை 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டினர்.

ரோகித் சர்மா

ஆனால் 3வது நாள் முடிவின் கடைசி பந்தில் டிஃபன்ஸ் ஆடிய விராட் கோலி துரதிருஷ்ட வசமாக அவுட்டாகி வெளியேறினார். சதமடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 70 ரன்களில் கோலி வெளியேற, சர்பராஸ் கான் ஆட்டமிழக்காமல் 70 ரன்களுடன் களத்தில் நீடிக்கிறார். 125 ரன்கள் பின் தங்கிய நிலையில் 4வது ஆட்டத்தை இந்தியா தொடரவிருக்கிறது.

விராட் கோலி

பெரிய இன்னிங்ஸை ஆடக்கூடியவர் சர்பராஸ் கான் என்பதால், இந்திய அணி இந்த போட்டியை சமன்செய்யவேண்டுமானால் சர்பராஸ் கான் நாளை இரண்டு செஸ்ஸன்கள் முழுவதும் விளையாடி ரன்களை சேர்க்கவேண்டும்.

சர்பராஸ் கான்

இந்தியா மற்றும் நியூசிலாந்து இரண்டு அணிகளும் சேர்ந்து இன்றைய ஒரே நாலில் 453 ரன்களை குவித்து அசத்தினர். இது இந்திய மண்ணில் ஒருநாள் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன்களாக பதிவுசெய்யப்பட்டது.