மைக்கேல் பெவன் puthiya thalaimurai
கிரிக்கெட்

”இதை யார் செய்கிறார்களோ அவர்களுக்குதான் கோப்பை” - ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் பிரத்யேக பேட்டி

நடப்பு உலகக்கோப்பையில் எந்த அணி வெறும் என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

Prakash J

ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவந்த ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, இன்னும் இரண்டு தினங்களில் நிறைவுபெற இருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் நடைபெற்ற இந்த தொடரில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன.

இதையடுத்து இரு அணிகளும், 20 ஆண்டுகளுக்குப் பின் மோத இருப்பதால், பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரு அணிகளும் நவம்பர் 19ஆம் தேதி, மதியம் 2 மணிக்கு, குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இதையும் படிக்க: WC Final: சுழலில் திணறும் ஆஸ்திரேலியா.. அஸ்வினுக்கு வாய்ப்பு? மாற்றம் செய்யும் ரோகித்?

இந்த நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், ”சொந்த மண்ணில் ஆடுவதால் இந்திய அணிக்குச் சாதகம்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “2003இல் இறுதிப்போட்டியில் ஆடிய ஆஸ்திரேலிய அணியும் தற்போது களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியும் ஒப்பிடத்தக்கவையே. இரு அணிகளுமே அந்தந்த தொடர்களில் ஆதிக்கம் செலுத்தின.

மைக்கேல் பெவன்

இந்திய அணிக்கு சொந்த மண்ணில் ஆடுவது சாதகமாக அமைந்துள்ளது. இறுதிப்போட்டியில் யாருக்கு வெற்றி என உறுதியாகக் கூற முடியாது. சிறந்த அணியான தென்னாப்பிரிக்கா அரையிறுதியில் தோற்றத்தைப் பார்த்தோம். இறுதிப்போட்டியில் நெருக்கடியான சூழலைச் சிறப்பாகக் கையாளும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்” எனத் தெரிவித்துள்ளார்.