ஐசிசி, இலங்கை புதிய தலைமுறை
கிரிக்கெட்

அரசு தலையீடு: இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி

அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

Prakash J

அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தற்போது நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பெரும்பாலான போட்டிகளில் படுதோல்வி அடைந்து வருகிறது. இதனையடுத்து இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் விவகாரத்தில் அரசு தலையீட்டை கண்டித்து அந்த அணி சஸ்பெண்ட் செய்யப்படுகிறது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதிபடுத்துக. இவ்விவகாரத்தில் தன்னாட்சி நிர்வாகிப்பட வேண்டும்’ என ஐசிசி தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியம்

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி 9 போட்டிகளில் பங்குபெற்று 2இல் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. இதையடுத்து, அந்த அணியின் அடுத்தசுற்று வாய்ப்பு பறிபோனது. இதனால் அவ்வணி மீது அதிக விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.