லியோ திரைப்பட முன்னோட்டம் வெளியீட்டின் போது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ரசிகர்களை காவல்துறை தவறாக கையாண்டதே பிரச்னைக்கு காரணம் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ரசிகர்களை காவல்துறை முறையாக கையாண்டிருக்க வேண்டும் என அது தொடர்பான மனு மீதான விசாரணையின்போது நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
ரோகிணி திரையரங்கிற்கு வெளியே ட்ரெய்லர் வெளியிட எந்த அனுமதியும் கோரப்படவில்லை என்று கூறிய காவல்துறை தரப்பு வழக்கறிஞர், புகார் இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் விஜய் ரசிகர்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழும் என்றும் கூறினார்.
எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுப்பதில்லை என்றும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா விளக்கம் அளித்தார்.