pak vs ban cricinfo
கிரிக்கெட்

பெஸ்ட் Fast Bowling யூனிட் பாகிஸ்தானா? வங்கதேசமா?.. டெஸ்ட் வரலாற்றில் சம்பவம் செய்த BAN பவுலர்கள்!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 172 ரன்னில் ஆல்அவுட் செய்து அசத்தியுள்ளனர் வங்கதேசத்தின் வேகப்பந்துவீச்சாளர்கள்.

Rishan Vengai

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்ற நிலையில், அபாரமான பேட்டிங்க் மற்றும் பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதெச அணி பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்த வங்கதேசம், பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கும் முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது.

pak vs ban

இந்நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடினமான போராட்டத்திற்கு பிறகு வங்கதேச அணியும் 262 ரன்களை அடித்தது.

அதற்குபிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியை திணறடித்த வங்கதேசத்தின் வேகப்பந்துவீச்சாளர்கள் 172 ரன்னுக்கு வங்கதேசத்தை ஆல்அவுட் செய்து சம்பவம் செய்தனர்.

டெஸ்ட் வரலாற்றில் வங்கதேச வேகப்பந்துவீச்சாளர்கள் செய்த சம்பவம்..

12 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சு தாக்குதலை வெளிப்படுத்திய வங்கதேச பவுலர்களான ஹசன் மஹ்மூத் மற்றும் நஹித் ராணா இருவரும் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

வங்கதேசத்தின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் பேட்டர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய முகமது ரிஸ்வான் போராடினாலும், அவரையும் 43 ரன்னில் வெளியேற்றீய ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தானின் சிதைவுக்கு முக்கிய காரணமாக மாறினார், நஹித் ராணா 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, மீதமிருக்கும் ஒரு விக்கெட்டை டஸ்கின் கைப்பற்றினார். அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு சுருண்டது.

ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் வங்கதேசத்தின் வேகப்பந்துவீச்சாளர்கள் அனைத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்துவது இதுவே முதல்முறை. பொதுவாக சிறந்த வேகப்பந்துவீச்சு யூனிட்டை வைத்திருக்கும் அணி என பாகிஸ்தான் கூறப்படும் நிலையில், இந்தபோட்டியில் சிறந்தவேகப்பந்துவீச்சை வைத்திருப்பது பாகிஸ்தானா அல்லது வங்கதேசமா என நினைக்க செய்துவிட்டனர் வங்கதேச வேகப்பந்துவீச்சாளர்கள்.

195 ரன்கள் அடித்தால் வென்ற இலக்குடன் விளையாடிவரும் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை எடுத்துள்ளது. நாளை இலக்கை எட்டும் பட்சத்தில் டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வங்கதேசம் கைப்பற்றி சாதனை படைக்கும்.