david warner x
கிரிக்கெட்

2025 சாம்பியன்ஸ் டிராபியில் டேவிட் வார்னர் இருக்க மாட்டார்.. வாய்ப்பை மறுத்த அணித்தேர்வாளர் பெய்லி!

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் டேவிட் வார்னருக்கு இடமில்லை என்று அணித்தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பையின் இந்தியா அணிக்கு எதிரான போட்டியிலிருந்து அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஆஸ்திரேலியா நட்சத்திர பேட்டர் டேவிட் வார்னர் ஓய்வை அறிவித்தார். முதலில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அவர், டி20 உலகக்கோப்பை தொடரோடு டி20 வடிவத்திற்கும் முடிவை எட்டினார்.

ஆனாலும் ஊழியர்கள் மற்றும் ஆஸ்திரேலியா நிர்வாகம் வாய்ப்பு வழங்கினால் “2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் பங்கேற்க தயாராகவே இருக்கிறேன்” என்ற தன்னுடைய விருப்பத்தையும் பதிவுசெய்தார்.

அதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் மற்றும் ஊழியர்கள், ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தன்னுடைய நன்றியை பகிர்ந்துகொண்ட டேவிட் வார்னர், அந்த பதிவிலும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடும் தன்னுடைய விருப்பத்தை குறிப்பிட்டிருந்தார்.

david warner

இந்நிலையில் டேவிட் வார்னர் சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெறுவாரா? என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஆஸ்திரேலியா அணியின் தலைவர் ஜார்ஜ் பெய்லி “டேவிட் வார்னரை தாங்கள் ஓய்வுபெற்ற வீரராகவே பார்ப்பதாக” அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

டேவிட் வார்னருக்கு இடமில்லை..

37 வயதான நட்சத்திர பேட்டர் டேவிட் வார்னர் தன்னுடைய புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்க்கையில் 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதங்கள் மற்றும் 33 அரைசதங்களுடன் 6,932 ரன்கள் குவித்துள்ளார். அவர் 2021 டி20 உலகக்கோப்பை, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 ODI உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இருந்தார்.

David Warner

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் அனைத்தையும் பார்த்துவிட்ட டேவிட் வார்னர் குறித்து பேசிய ஜார்ஜ் பெய்லி, “டேவிட் வார்னர் ஒரு ஓய்வு பெற்றுவிட்ட வீரர் என்பதே எங்கள் புரிதல், அவர் மூன்று வடிவங்களிலும் நம்பமுடியாத வாழ்க்கையாக இருந்ததற்காகப் பாராட்டப்பட வேண்டும். ஆனால் நிச்சயம் அவர் பாகிஸ்தானில் இருக்க மாட்டார் என்பதே எங்கள் திட்டம்” என்று உடைத்து பேசியுள்ளார்.

Glenn maxewell

தொடக்க வீரராக அதிரடியில் மிரட்டிவரும் இளம்வீரர் ஜேக் ஃபிரேசர் அவர்களின் அடுத்த ஓப்பனராக பார்க்கப்படும் நிலையில், அணியில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல்லின் இருப்பே கடும்போட்டியில் இருப்பதாகவும் பெய்லி சுட்டிக்காட்டியுள்ளார்.