pant web
கிரிக்கெட்

ரிஷப் பண்ட்டின் காயத்தின் நிலை என்ன? 2-வது டெஸ்ட்டில் விளையாடுவாரா? கவுதம் கம்பீர் பதில்!

நியூசிலாந்து அணி 1988-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி சாதனை படைத்தது.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. அதற்குபிறகு விளையாடிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திராவின் அதிரடியான சதத்தால் 402 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.

rachin

அதற்குபிறகு 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இந்திய அணி, சர்பராஸ் கான் 150 ரன்கள், ரிஷப் பண்ட் 99 ரன்கள், கோலி 70 ரன்கள் மற்றும் ரோகித் சர்மா 52 ரன்கள் என அடிக்க இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்களை குவித்தது இந்தியா.

இதன்மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற நியூசிலாந்துக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியால் அவ்வளவு குறைவான ஸ்கோரை டிஃபண்ட் செய்யமுடியவில்லை. முடிவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, 1988-க்கு பிறகு முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்று சாதனை படைத்தது.

pant - sarfaraz

இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புனேவில் நாளை நடைபெறவிருக்கிறது.

ரிஷப் பண்ட் விளையாடுவாரா?

பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது ரிஷப் பண்டிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. காயத்தின் காரணமாக ஃபீல்டிங்கில் இருந்து வெளியேறினாலும், அணிக்காக கடினமான நேரத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பண்ட் 99 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரன்களின் போதுகூட பண்ட்டால் வேகமாக ஓடமுடியவில்லை.

pant

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பண்ட் விளையாடுவாரா, காயத்தால் விளையாட முடியாமல் போகுமா என்ற குழப்பம் நீடித்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாலர் கவுதம் கம்பீர் பாசிட்டிவான அப்டேட்டை வழங்கியுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கவுதம் கம்பீர், “ரிஷப் பண்ட் விளையாடுவதில் எந்த பிரச்னையும் இல்லை, அவர் நன்றாக இருக்கிறார். நாளை போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்வார்” என்று கூறியுள்ளார்.

pant

முதல் டெஸ்ட் போட்டியில் சதமடிக்கும் வாய்ப்பை 1 ரன்னில் தவறவிட்ட பண்ட், 7-வது முறையாக 90+ ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். பண்ட் அவுட்டான நிலையில் நல்ல நிலைமையில் இருந்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் நிலைக்கு சென்றது.