2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி x
கிரிக்கெட்

“லீவ் கேன்சல் பண்ணிட்டு ODI தொடருக்கு வாங்க..” சீனியர் வீரர்களுக்கு கவுதம் கம்பீர் கோரிக்கை!

Rishan Vengai

இலங்கை அணிக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவியேற்க உள்ளார். மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியா பங்கேற்கவுள்ள நிலையில், டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு ஓய்வில் இருந்துவரும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மூன்றுபேரும் இலங்கை தொடருக்கான தொடரிலிருந்து விடுப்பு கேட்டுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டது.

Rohit Sharma

மேலும் ஹர்திக் பாண்டியாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவும், ஒருநாள் தொடருக்கு கேஎல் ராகுல் அல்லது சுப்மன் கில்லும் கேப்டனாக செயல்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முதல் கோரிக்கையாக ஒருநாள் தொடருக்கு அழைக்கும் கம்பீர்!

டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இலங்கை தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்குமாறு மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை வலியுறுத்தியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

rohit sharma - virat kohli

வெளியாகியிருக்கும் தகவலின் படி, 2025 சாம்பியன்ஸ் டிரோபிக்கு முன்னதாக இந்திய அணி குறைவான ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவிருப்பதாகவும், இடையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் முக்கியமானதாக இருக்கும் என்பதால், சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முழு அணியும் பங்கேற்க கம்பீர் விரும்புகிறார். அதனால் ரோகித், விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

gautam gambhir

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டுமே இந்திய அணி விளையாடவிருப்பதால் கம்பீரின் கோரிக்கை நியாயமானதாக பார்க்கப்படுகிறது.