MS Dhoni x
கிரிக்கெட்

2025 ஐபிஎல்லில் தோனி ஓய்வு? சிஎஸ்கே பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Rishan Vengai

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 முறை கோப்பைகளுக்கு அழைத்துச்சென்ற கேப்டன் என்ற பெருமையை 2023 ஐபிஎல் தொடரில் எம் எஸ் தோனி பெற்றார். அதற்குபிறகு 2024 ஐபிஎல் தொடரில் தன்னுடைய கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்த தோனி, சாதாரண ஒரு வீரராக மட்டுமே தற்போது சிஎஸ்கே அணியில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற குழப்பம் நீடித்தது. ஆனால் இடையில் ஐபிஎல் உரிமையாளர்களுடன் விதிமுறை மாற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட உரையாடல்களுக்கு பிறகு அன்கேப்டு வீரராக தோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்ற செய்தி வைரலானது.

MS Dhoni

இதற்கிடையில் தற்போது சிஎஸ்கே அணி பகிர்ந்திருக்கும் ஒரு பதிவானது ரசிகர்களிடையே தோனி மீண்டும் ஐபிஎல்லில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஐபிஎல் தொடரில் ‘மேஜர் மிஸ்ஸிங்’..

2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், அந்த ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்வதற்கான விதியை பொறுத்தே தோனி விளையாடுவதை முடிவெடுப்பார் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், தோனியின் நெ.7 ஜெர்ஸியை பகிர்ந்து 'மேஜர் மிஸ்ஸிங்' எனப் பதிவிட்டுள்ளனர். இது மீண்டும் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் தோனி ஓய்வை அறிவிக்கவுள்ளார் என்றும் மறு தரப்பினர் சிஎஸ்கே ஜெர்ஸி மாறப்போகிறது அதனால் தான் இப்படி பதிவிட்டுள்ளார்கள் என்றும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் இருந்து இதுவரை எவ்வித விளக்கமும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சிஎஸ்கே அணிக்கு வரவிருப்பதாக கூறப்படும் நிலையில், தோனியின் ஓய்வு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்றே கூறப்படுகிறது.