eng vs pak cricinfo
கிரிக்கெட்

ENG v PAK 3வது டெஸ்ட்: சுழலில் திணறடிக்கும் சஜித் கான்; அடுத்தடுத்து வெளியேறிய ரூட் - போப் - ப்ரூக்!

தொடர் யாருக்கு என முடிவு செய்யும் 3வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 110 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது இங்கிலாந்து அணி.

Rishan Vengai

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.

முதலில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் இரட்டை சதமும், ஹாரி ப்ரூக் முச்சதமும் அடித்து அசத்த 823 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி பாகிஸ்தானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

harry brook

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம், நஷீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி முதலிய வீரர்கள் நீக்கப்பட்டு சஜித் கான், நோமன் அலி முதலிய ஸ்பின்னர்களும், கம்ரான் குலாம் என்ற பேட்ஸ்மேனும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

குலாம் அசத்தலான சதம் மற்றும் சஜித் கான் 9 விக்கெட்டுகள், நோமன் அலி 11 விக்கெட்டுகள் என இங்கிலாந்தை திணறடிக்க பாகிஸ்தான் அணி 15 தொடர் தோல்விகளுக்கு பிறகு சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவுசெய்தது.

சஜித் கான் - நோமன் அலி

இந்நிலையில் தொடர் யாருக்கு என முடிவுசெய்யும் கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்றுவருகிறது.

மீண்டும் விக்கெட் வேட்டை நடத்தும் சஜித் - நோமன்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்டதால் 3வது போட்டியிலும் பாபர் அசாமுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அதே அணியோடு பாகிஸ்தான் சென்றுள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்துவரும் நிலையில், பாகிஸ்தானின் ஸ்டார் ஸ்பின்னர்களாக ஜொலித்த சஜித் கான் மற்றும் நோமன் அலி இருவரும் 3வது போட்டியிலும் சுழலில் மேஜிக்கை நிகழ்த்தி வருகின்றனர்.

தொடக்கத்தில் ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் சிறப்பாக தொடங்கினாலும், கம்பேக் கொடுத்த நோமன் அலி மற்றும் சஜித் கான் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை இக்கட்டான நிலைமைக்கு தள்ளியுள்ளனர்.

சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரைசதமடித்த டக்கெட் 52 ரன்னில் வெளியேற, கிராவ்லி 29 ரன்னில் வெளியேறினார். அதற்குபிறகு வந்த ஜோ ரூட் (5), போப் (3), ஹாரி ப்ரூக் (5) மற்றும் பென் ஸ்டோக்ஸ் (12) அனைவரது விக்கெட்டையும் வெளியேற்றிய சஜித் கான் இங்கிலாந்து அணியை தலைகீழாக திருப்பியுள்ளார்.

தற்போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்களுடன் விளையாடிவருகிறது. சஜித் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.