விராட் கோலி - எம்எஸ் தோனி web
கிரிக்கெட்

அழைப்பு விடுத்தும் ராமர் கோவில் திறப்பு விழாவை தவிர்த்தாரா தோனி? - ரோகித், கோலி பங்கேற்காதது ஏன்?

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவானது ஜனவரி 22ம் தேதியான இன்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில், பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Rishan Vengai

உச்சநிதிமன்ற தீர்ப்பை அடுத்து ராமர் கோவிலானது ராம ஜென்ம பூமி எனும் தனியார் அறக்கட்டளையால் உத்தரபிரதேசத்தின் அயோத்தி நகரில் கட்டப்பட்டு, ராமர் சிலை திறப்பு விழா ஜனவரி 22ம் தேதியான இன்று நடைபெற்றது. கோவில் கருவறையில் ராமரின் குழந்தைப் பருவ சிலை வைக்கப்பட்டு, அதற்கான பிரதிஷ்டை சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்டன. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு விழாவை சிறப்பித்ததோடு, நாட்டில் உள்ள பல்வேறு துறைகளைச்சார்ந்த முக்கிய பிரபலங்களும் விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ram pran pratishtha - modi

அயோத்தியில் நடந்த மாபெரும் நிகழ்வில் பாலிவுட் நடிகர் அமிதாச் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரன்பீர் கபூர், ஆலியா பட் முதலிய பிரபலங்களும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், ரவிந்திர ஜடேஜா, மிதாலி ராஜ், சாய்னா நேவால் முதலிய விளையாட்டு வீரர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

dhoni

கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில், ராமர் கோவில் சிலை திறப்பு விழாவிற்கு “சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, சுனில் கவாஸ்கர், கபில்தேவ், ராகுல் டிராவிட், விரேந்திர சேவாக், கங்குலி, கும்ப்ளே, ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்” முதலிய வீரர்களுக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.

virat kohli

இந்நிலையில் அழைப்பு விடுக்கப்பட்ட வீரர்களில் இந்திய முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா முதலிய வீரர்கள் பங்கேற்கவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை.

தோனி, கோலி மற்றும் ரோகித் பங்கேற்காதது ஏன்?

ரோகித் சர்மாவை பொறுத்தவரையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

Virat Kohli

விராட் கோலியை பொறுத்தவரையில், தனிப்பட்ட காரணங்களுக்காக குடும்பத்துடன் இருப்பதாகவும், முதலிரண்டு போட்டிகளில் பங்கேற்கவும் மாட்டார் என பிசிசிஐ தரப்பு விளக்கமளித்துள்ளது.

dhoni

இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பொறுத்தவரையில், எதற்காக அவர் பங்கேற்கவில்லை என தெரியவில்லை. ஒருவேளை இதற்குபிறகு சென்று கோவிலில் ராமர் சிலையை தரிசனம் செய்வாரா என்பது தெரியவில்லை. முன்னதாக தோனி டென்னிஸ் விளையாடிய புகைப்படம் ஒன்று மட்டும் வெளியாகி வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.

இதனிடையே, தோனி பங்கேற்காதது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏன் பங்கேற்கவில்லை என்று சொல்கிறீர்கள் விரைவில் அவர் அயோத்தி வந்து தரிசனம் செய்வார் என்று ஒரு சிலரும், அவர் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டதாக அதனால் இவற்றில் இருந்து எல்லாம் அவர் ஒதுங்கி நிற்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர். சிலர் ஹனுமார் குறித்து தோனி ஏற்கனவே பேசிய வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

ஒரு சிலர் ஏன் ரோகித் சர்மாவும், தோனியும் பங்கேற்கவில்லை என்று விமர்சித்தும் வருகிறார்கள். ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்பதும், பங்கேற்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம் என்று சிலர் கூறிவருகின்றனர்.

மற்றவீரர்களை பொறுத்தவரையில் ஜடேஜா, அனில்கும்ப்ளே இருவரும் அவருடைய மனைவியுடன் சென்று கோவில் திறப்பு விழாவில் பங்கேற்றனர். வெங்கடேஷ் பிரசாத், மிதாலி ராஜ் முதலிய வீரர்களுடன் சச்சின் டெண்டுல்கரும் பங்கேற்று சிறப்பித்தார்.