கவுதம் கம்பீர் web
கிரிக்கெட்

“இந்திய அணி பாதுகாப்பான கைகளில் சென்று சேர்ந்துள்ளது..” கவுதம் கம்பீர் தலைமை குறித்து பிரெட் லீ!

Rishan Vengai

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட், 2013-ம் ஆண்டுக்கு பிறகு கோப்பை வெல்லாத இந்திய அணியை 11 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்து வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஒரு வீரராக கோப்பை வெல்லமுடியாத ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக தன்னுடைய கோப்பை கனவை நிறைவேற்றி விடைபெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், ராகுல் டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியை தலைமை பயிற்சியாளராக இருந்து வழிநடத்தும் பொறுப்பு கவுதம் கம்பீருக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து கவுதம் கம்பீர் இந்திய அணியில் இணைவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

india t20 world cup 2024

இந்நிலையில் கவுதம் கம்பீரின் ஆக்ரோசம், கிரிக்கெட்டை அணுகும் விதம் இந்திய அணிக்கு பெரிய பலமாக அமையும் என்று முன்னாள் வீரர்கள் பாராட்டியிருக்கும் நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீயும் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி பாதுகாப்பான கைகளில் உள்ளது..

கவுதம் கம்பீரின் நியமனம் குறித்து பேசியிருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ, “கவுதம் கம்பீர் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு அற்புதமான வேலையைச் செய்கிறார். KKR அணியுடன் ஐபிஎல் பட்டம் வென்றதை ஒரு சிறந்த உதாரணமாக கூறலாம். அவர் எப்போதும் அணியுடன் இருக்கிறார், எப்போதும் விளையாட்டின் உச்சத்தில் இருக்க நினைக்கிறார். தனது வீரர்களை ஒன்றிணைத்து தனது அணியை ஒருங்கிணைக்கும் ஒரு வழியைக் எப்போதும் கண்டுபிடிக்க முயன்றுகொண்டே இருக்கிறார். தனது தலைமையின் கீழ் ஒரு திடமான கட்டமைப்பை உருவாக்குகிறார்.

gautam gambhir

கம்பீர் விளையாடும் காலங்களில் ஒரு அற்புதமான வீரராக இருந்துள்ளார், அவரது ஆக்ரோஷமும் வெற்றி மனப்பான்மையும் இந்திய அணிக்கு பெரிதும் உதவும். கவுதம் கம்பீர் பயிற்சியாளராக இருப்பதால் இந்தியா பாதுகாப்பான கைகளில் இருப்பதாக உணர்கிறேன். கோப்பையுடன் முடித்த ராகுல் டிராவிட்டுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா உடன் பிரெட் லீ கூறியுள்ளார்.