shami web
கிரிக்கெட்

மூத்த பவுலர்களான அஸ்வின், முகமது ஷமிக்கு தகுந்த திட்டம் தேவை.. பவுலிங் கோச் கவலை! பின்னணி இதுதான்!

Rishan Vengai

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் வகையில் டி20 கிரிக்கெட் வடிவத்திலிருந்து ஓய்வை அறிவித்தனர். அதனைத்தொடர்ந்து அஸ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா இருவரும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தனர்.

இத்தனை காலம் கிரிக்கெட்டை கட்டிஆண்ட மூத்தவீரர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியேறும் நிலையில், மூத்தபந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முகமது ஷமியின் எதிர்காலம் குறித்த கவலை எழுந்துள்ளது.

R Ashwin

இந்திய அணியை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களின் கூடாரமாக இருந்துவருகிறது, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என யார் வெளியேறினாலும் அவருக்கான மாற்றுவீரர்கள் பெஞ்சில் இருக்கிறார்கள். ஆனால் பந்துவீச்சில் அஸ்வின் மற்றும் முகமது ஷமி போன்ற வீரர்கள் சென்றுவிட்டால் யார் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்ற கேள்வி மட்டும் பெரிதாகவே இருந்துவருகிறது.

அஸ்வின் மற்றும் முகமது ஷமிக்கு தகுந்த திட்டம் தேவை..

பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில் வெளியேறவிருக்கும் பந்துவீச்சு பயிற்சியாளரான பராஸ் மம்ப்ரே, மூத்த பவுலர்களான முகமது ஷமி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு தகுந்த திட்டங்கள் தேவையென்றும், இளம் பந்துவீச்சாளர்கள் மூத்த பவுலர்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

Shami

பந்துவீச்சாளர்கள் குறித்து பேசியிருக்கும் மம்ப்ரே, “முகமது ஷமி மற்றும் அஸ்வினுடன் அவர்களின் எதிர்காலம் குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது. நாங்கள் இளைஞர்களை தயார்செய்து முதலீடு செய்யும்போது, ​​அவர்களுடன் மூத்தவீரர்கள் இருப்பதை உறுதி செய்தோம். அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் முதலிய இளம் பவுலர்களை மூத்த பவுலர்களிடம் நெருக்கமாக வைத்திருந்தோம்” என்று கூறியுள்ளார்.

arshdeep singh

அதற்கான அவசியம் குறித்து பேசியிருந்த மம்ப்ரே, "நாங்கள் 2015-ல் தொடங்கினோம், 2020-ல் குளம் தயாராகிவிட்டது. நீங்கள் அர்ஷ்தீப்பை எடுத்துக்கொண்டால், அவர் 2018-ல் U-19 உலகக் கோப்பையில் பங்கேற்றார், அதனைத்தொடர்ந்து 2024-ம் ஆண்டுதான் மூத்த அணியில் ஒரு அங்கமாகவே மாறினார். அப்படி ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர் மூத்த அணியில் அங்கம்பெறுவதற்கே நான்கு முதல் ஐந்து ஆண்டுவரை எடுத்துக்கொள்கிறது. அதனால் மூத்த வீரர்கள் இளம் பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்து செயல்படுவது அவசியமானது” என்று கூறியுள்ளார்.