ben stokes - james anderson cricinfo
கிரிக்கெட்

வரலாற்றில் ஒரே 'Fast Bowler'! 704 விக்கெட்டுகளுடன் விடைபெற்ற ஆண்டர்சன்.. புது வரலாறு படைத்த Stokes!

Rishan Vengai

இந்தியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணி, அதில் 1-4 என தோல்வியை சந்தித்த போது இங்கிலாந்தின் பாஸ்பால் கிரிக்கெட் மீது விமர்சனம் வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் தங்களுடைய ஆட்டத்தை தொடங்கியிருக்கும் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் பாஸ்பால் கிரிக்கெட்டை விளையாடி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

200வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய பென் ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

James Anderson

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, தங்களுடைய இரண்டு இன்னிங்ஸ்களிலும் 121, 136 ரன்களுக்கு ஆல் அவுட்டான வெஸ்ட் இண்டீஸ் அணி போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

atkinson

அறிமுக போட்டியில் களமிறங்கிய அட்கின்சன் 12 விக்கெட்டுகளையும், ஜேமி ஸ்மித் 70 ரன்களும் அடித்து அசத்த, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய 200வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆண்டர்சன் 700 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளராக தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டார்.

முதல் வீரராக பென் ஸ்டோக்ஸ் படைத்த இமாலய சாதனை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் ஓவரிலேயே கிர்க் மெக்கென்சியை டிஸ்மிஸ் செய்த ஸ்டோக்ஸ், தனது 200வது டெஸ்ட் விக்கெட்டைப் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்களுடன் 200 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய முதல் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் மூன்றாவது உலக வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ben stokes

இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஸ்டோக்ஸ், 13 சதங்கள் மற்றும் 31 அரைசதங்களுடன் 35.30 சராசரியில் 6,320 ரன்களையும் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 258 ஆகும்.

ben stokes

6000 ரன்கள் + 200 டெஸ்ட் விக்கெட்டுகள் வைத்திருக்கும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள்:

1. ஜாக் காலிஸ் - 166 டெஸ்ட், 13,289 ரன்கள் மற்றும் 292 விக்கெட்டுகள் - தென்னாப்பிரிக்கா

2. கேரி சோபர்ஸ் - 93 டெஸ்ட், 8,032 ரன்கள் மற்றும் 235 விக்கெட்டுகள்

3. பென் ஸ்டோக்ஸ் - 103 டெஸ்ட், 6320 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள்

704 வைரங்களுடன் விடைபெற்ற ஆண்டர்சன்!

தன்னுடைய கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய ஜேம்ஸ் ஆண்டர்சன், உலககிரிக்கெட்டில் 700 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற இமாலய சாதனையுடன் 704 விக்கெட்டுகளுடன் தன்னுடைய பயணத்தை முடித்துள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன்

அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வைத்துள்ள வேகப்பந்துவீச்சாளர்:

1. ஜாம்ஸ் ஆண்டர்சன் - 704 விக்கெட்டுகள்

2. ஸ்டூவர்ட் பிராட் - 604 விக்கெட்டுகள்

3. க்ளென் மெக்ராத் - 563 விக்கெட்டுகள்