Ban vs SL X
கிரிக்கெட்

IND-PAK ரைவல்ரி விடுங்க; உச்சம்தொட்ட BAN-SL ரைவல்ரி! 'Broken Helmet' செலிப்ரேஷன் மூலம் கலாய்த்த BAN!

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதற்கு பிறகு, ஆஞ்சலோ மேத்யூஸ் டைம்அவுட் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் உடைந்த ஹெல்மெட்டை வைத்து வங்கதேச வீரர்கள் இலங்கையை கலாய்த்தனர்.

Rishan Vengai

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2-1 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை அணி.

அதனைத்தொடர்ந்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் வங்கதேசமும் இரண்டாவது போட்டியில் இலங்கை அணியும் வெற்றிபெற, 3வது போட்டியானது விறுவிறுப்பாக இன்று நடைபெற்றது.

Tanzid

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்கள் அனைவரும் சொதப்ப, மிடில் ஆர்டர் வீரராக வந்த ஜனித் லியாங்கே சதமடித்து அசத்தினார். ஜனித்தின் 101 ரன்கள் இருந்த போதும் கூட இலங்கை அணியால் வெறும் 235 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி தன்ஷித் ஹாசன் (84 ரன்கள்), ரிஷாத் ஹொசைன் (48 ரன்கள்) இருவரின் அசத்தலான ஆட்டத்தால் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

time out

2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய வங்கதேச அணி, இலங்கை அணியை “Broken Helmet” செலப்ரேசன் மூலம் பங்கமாக கலாய்த்து மகிழ்ச்சியை கொண்டாடியது. டி20 தொடரை வென்ற இலங்கை அணி “TIME OUT" செலப்ரேசன் செய்து வங்கதேச அணியை ட்ரோல் செய்த நிலையில், பதிலடி கொடுக்கும் வகையில் வங்கதேச அணி ’உடைந்த ஹெல்மெட்’ செலப்ரேசனை கையில் எடுத்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மாற்றி மாற்றி கலாய்த்துக்கொண்ட இலங்கை-வங்கதேச வீரர்கள்!

பொதுவாகவே இலங்கை மற்றும் வங்கதேசம் மோதுகிறது என்றால் நாகினி டான்ஸ், டைம்அவுட் விக்கெட் மற்றும் வீரர்கள் மோதல் என கலாட்டாவிற்கு பஞ்சம் இருக்காது. இந்தியா-பாகிஸ்தான், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளின் ரைவல்ரிக்கு பிறகு இலங்கை-வங்கதேசம் என்ற ரைவல்ரி தற்போது பெரிதாக உருவெடுத்துள்ளது.

முதலில் நடைபெற்ற டி20 தொடரில் வங்கதேச பவுலர் ஷோரிஃபுல் இஸ்லாம், இலங்கை வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ விக்கெட்டை வீழ்த்திய பிறகு 'Timed Out' கொண்டாட்டத்துடன் செலப்ரேஷன் செய்து இலங்கை வீரர்களை வெறுப்பேற்றினார். அதன்பிறகு டி20 தொடரை வென்ற பிறகு இலங்கை வீரர்கள் அனைவரும் 'Timed Out' செலப்ரேசன் செய்து வங்கதேச அணியை வெறுப்பேற்றி பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் தான் இலங்கை வீரர்கள் டி20 தொடரை வென்று வெறுப்பேற்றிய காரணத்தால், ஒருநாள் தொடரை வென்ற வங்கதேச வீரர்கள் ஆஞ்சலோ மேத்யூஸின் டைம்அவுட் விக்கெட்டை நியாபகப்படுத்தும் விதமாக உடைந்த ஹெல்மெட் செலப்ரேசன் மூலம் இலங்கை அணியை வெறுப்பேற்றியுள்ளனர்.

இணையத்தில் வைரலாகும் வீடியோவில், “ஆஞ்சலோ மேத்யூஸ் ஹெல்மெட்டை உடைந்துவிட்டதாக சென்று அம்பயரிடமும், வங்கதேச கேப்டனிடம் தெரிவித்ததை, அப்படியே செய்து காட்டிய முஸ்ஃபிகூர் ரஹிம் ஹெல்மட்டை கையில் வைத்து ஒவ்வொரு வீரரிடமும் சென்று கூறுவது போல்” செலப்ரேசன் செய்து வெறுப்பேற்றினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.