pak vs ban cricinfo
கிரிக்கெட்

137 ஆண்டில் முதல் அணியாக பிரமாண்ட சாதனை! பாகிஸ்தானை 2-0 என ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்த வங்கதேசம்!

Rishan Vengai

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்ற நிலையில், அபாரமான பேட்டிங்க் மற்றும் பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச அணி பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்த வங்கதேசம், பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கும் முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது.

pak vs ban

இந்நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை 172 ரன்களுக்கு ஆல்அவுட் செய்த வங்கதேச அணி, பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது.

137 ஆண்டுகளில் முதல் அணி..

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 274 ரன்களை அடித்தது. அதன்பிறகு தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் குர்ரம் தன்னுடைய அபாரமான பவுலிங்கால் விக்கெட் வேட்டை நடத்தினார். 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வங்கதேச அணி, அடுத்த 30 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகிவிடும் என்றே தோன்றியது.

மெஹிதி ஹாசன் - லிட்டன் தாஸ்

ஆனால் 7வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹாசன் இருவரும் 186 ரன்கள் பார்ட்னர்திப் போட்டு, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தரமான கம்பேக் கொடுத்தனர். லிட்டன் தாஸ் 138 ரன்களும், மெஹிதி 78 ரன்களும் அடிக்க 26/6 என்ற நிலையிலிருந்து 262 ரன்களை குவித்தது வங்கதேசம்.

மெஹிதி ஹாசன் - லிட்டன் தாஸ்

12 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு வங்கதேச வேகப்பந்துவீச்சாளர்கள் பேரதிர்ச்சியை பரிசளித்தனர். வேகப்பந்துவீச்சாளர் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகள் மற்றும் நஹித் ராணா 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்த 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி.

அதன்பிறகு இலக்கை விரட்டிய வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஒரு வரலாற்று தொடர் வெற்றியை பதிவுசெய்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என ஒயிட்வாஷ் செய்த வங்கதேசம், முதல்முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது.

அதுமட்டுமில்லாமல் 137 வருடத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் 26/6 என்ற நிலையிலிருந்து கம்பேக் கொடுத்து வெற்றிபெற்ற முதல் அணி என்ற பெருமையையும் வங்கதேசம் பெற்றுள்ளது.

அதுமட்டுமில்லாமல் WTC புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 4வது இடத்தை பிடித்துள்ளது வங்கதேசம்.

பாகிஸ்தான் படைத்த மோசமான சாதனைகள்..

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் பல மோசமான சாதனைகளை தன் பெயரில் சேர்த்துள்ளது.

பாகிஸ்தான் படைத்த மோசமான சாதனைகள்,

  • கடந்த 1303 நாட்களாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட வெல்லவில்லை

  • வங்கதேசத்துக்கு எதிராக முதல்முறையாக டெஸ்ட் தொடர் இழப்பு

  • கடந்த 100ஆண்டில் வரிசையாக 10 போட்டிகளில் ஒரு வெற்றிகூட பெறாத முழு உறுப்பினர்கள் கொண்ட அணி

  • அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொண்ட ஒரு அணி சொந்த மண்ணில் தோல்வியை தழுவுவது வங்கதேசத்துக்கு பிறகு இரண்டாவது அணி

  • WTC 2024-2025 குவாலிஃபிகேசனிலிருந்து முதல் அணியாக வெளியேற்றம்