Dhoni - BCCI PT
கிரிக்கெட்

உலகின் 4வது பெரிய லீக் IPL| ’தோனி என்ற தனி ஒருவருக்காகவே புதிய விதி’-MSD Retain பற்றி அஸ்வின், DK..!

Rishan Vengai

2025 ஐபிஎல் தொடரானது மெகா ஏலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. எம்எஸ் தோனி, ரோகித் சர்மா முதலிய ஸ்டார் கேப்டன்களின் மூவ் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், 2025 ஐபிஎல் தொடரானது தற்போதே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 ipl

இந்நிலையில் மெகா ஏலத்திற்கான விதிமுறைகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. அதன்படி ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்றும், 120 கோடிவரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற அறிவிக்கப்பட்டது. இதில் குறிப்பிட்டு கூறும் விதிமுறையாக UNCAPPED PLAYER விதி பார்க்கப்பட்டது.

அதாவது, “சர்வதேச போட்டிகளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் UNCAPPED PLAYER ஆக கருதப்படுவார்கள் என்றும், அவர்களை ஏலத்தில் தக்கவைத்துக்கொள்ளலாம்” என்ற விதி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

தோனி

இந்தவிதிமுறை எம்.எஸ்.தோனி என்ற ஒருவருக்காக மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், அடுத்த 2025 ஐபிஎல் தொடரில் நிச்சயம் தோனி விளையாடுவார் என்ற கருத்துகள் சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறின.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் ஐபிஎல் தொடருக்கு தோனி எவ்வளவு முக்கியம் என்ற தங்களுடைய பார்வையை கருத்தாக முன்வைத்தனர்.

தோனி ஒருவருக்காகவே அன்கேப்டு விதிமுறை..

மகேந்திர சிங் தோனியை மீண்டும் விளையாட வைப்பதற்காகவே “UNCAPPED PLAYER” விதிமுறை கொண்டுவரப்பட்டதாக ஆருடம் கூறினார்.

இதுகுறித்து சமீபத்தில் க்றிக்பஸ் உடன் பேசிய தினேஷ் கார்த்திக், "அன்கேப்டு பிளேயர் விதிமுறை ஒரு மனிதனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது, நான் இதை கூறுவதில் உறுதியாக இருக்கிறேன். ஐபிஎல் தொடரில் எம் எஸ் தோனி என்ற மனிதர் முக்கிய பங்கு வகித்துள்ளார். தோனி ஐபிஎல் தொடரில் அங்கம் வகித்தால் அது எல்லோருக்கும் மகிழ்ச்சி தான், அது பிசிசிஐயாகவோ அல்லது எந்த அணியாகவோ இருந்தாலும் சரி, லீக் பல ஆண்டுகளாக எப்படிச் செயல்பட்டது, கடந்த 15-18 ஆண்டுகளாக ஐபிஎல் வீரர்களை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்பதுதான் பார்க்கவேண்டிய விசயம். இவை அனைத்திலும் எம் எஸ் தோனி என்ற மனிதர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

நீங்கள் எந்த டிவி ஒளிபரப்பாளரிடமும் கேட்கலாம், இந்த மனிதர் களத்தில் இறங்கும்போது, ​​​​ரேட்டிங் உயரும் என்ற பதில்தான் உங்களுக்கு கிடைக்கும். இது ஒரு உண்மை. தோனி என்பவர் (Heart of IPL) ஐபிஎல்லின் இதயம் போன்றவர்” என்று கூறியுள்ளார்.

ஐபிஎல்லில் ஒரு முக்கிய பங்குதாரர் தோனி..

தோனி குறித்து அவருடைய யூடியூப் சேனலில் பேசிய ரவிச்சந்திரன், ஐபிஎல் தொடரின் வளர்ச்சியில் தோனி ஒரு முக்கிய பங்குதாரர் என்று வெளிப்படுத்தினார்.

தோனி குறித்து பேசிய அவர், “உலகத்தின் 4வது மிகப்பெரிய பணக்கார லீக்காக ஐபிஎல் இருந்துவருகிறது. முதல் 3 இடத்தில் அமெரிக்காவில் இருக்கும் ஃபுட்பால் லீக், பேஸ்பால் லீக் மற்றும் என்பிஏ இருந்துவருகின்றன. அதற்குபிறகு நான்காவது இடத்தில் 8.6 மில்லியன் டாலர்ஸ் புழங்கும் பிரமாண்ட லீக்காக ஐபிஎல் இருக்கிறது. அதில் ஒரு முக்கிய பங்குதாரராக எம் எஸ் தோனி இருக்கிறார். அதனால் தோனி விளையாடுவது சிஎஸ்கே அணிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐபிஎல் தொடருக்கே ஸ்டேண்டிங் பாய்ண்ட் போன்றது” என்று அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.