ரஹ்மனுல்லா குர்பாஸ் cricinfo
கிரிக்கெட்

105 ரன்கள் விளாசிய ரஹ்மனுல்லா குர்பாஸ்.. SA-க்கு எதிராக 311 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான்!

Rishan Vengai

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது யுஏஇ-ல் நடைபெற்றுவருகிறது.

முதலில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, அவ்வணியை 33.3 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல்அவுட் செய்து மிரட்டியது. 4 பேர் டக் அவுட்டில் வெளியேறினர், ஃபசல்ஹக் பாரூக்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.

afg vs sa

107 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, 26 ஓவர் முடிவில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் வெற்றிபெற்றது. வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவை முதல்முறையாக வீழ்த்திய ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது.

இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியானது தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி 311 ரன்களை குவித்துள்ளது. தொடக்கவீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் சதமடித்து அசத்தியுள்ளார்.

சதமடித்த குர்பாஸ்.. தென்னாப்பிரிக்காவுக்கு 312 இலக்கு!

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் ரியாஸ் ஹஸ்ஸன் இருவரும் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் அபாரமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தது. ரியாஸ் வெளியேறினாலும் தொடர்ந்து அபாரமாக விளையாடிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என விளாசி தன்னுடைய 7வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.

குர்பாஸ்

35 ஓவருக்குள்ளாகவே குர்பாஸ் சதத்தை எட்டியதால் எப்படியும் 350 ரன்களுக்கு மேல் ஆப்கானிஸ்தான் எட்டும் என எதிர்ப்பார்த்த போது, சரியான நேரத்தில் குர்பாஸை 105 ரன்னில் வெளியேற்றினார் நான்ரே பர்க்கர்.

குர்பாஸ்

ஆனால் குர்பாஸ் வெளியேறினாலும் அடுத்தடுத்து களத்திற்கு வந்த ரஹ்மத் மற்றும் அஸ்மதுல்லா இருவரும் போட்டியை விட்டுக்கொடுக்காமல் அதிரடியாக விளையாடினர். ரஹ்மத் மற்றும் அஸ்மதுல்லா அடுத்தடுத்து அரைசதமடித்து அசத்த 50 ஓவர் முடிவில் 311 ரன்களை எட்டியது ஆப்கானிஸ்தான் அணி.

அஸ்மதுல்லா ஓமர்சாய்

312 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிவரும் தென்னாப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 11 ஓவருக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது.