worldcup, india, pakistan file image
கிரிக்கெட்

உலகக்கோப்பை அட்டவணை: இந்தியா-பாக். போட்டி அதிரடி மாற்றம்; 9 போட்டிகளை மாற்றிய ஐசிசி! காரணம் இதுதான்!

2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையில் 9 போட்டிகள் மாற்றப்பட்டுள்ளன.

Prakash J

2023ஆம் ஆண்டு ஒருநாள் ஆடவர் உலகக்கோப்பை தொடர், வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான போட்டி அட்டவணையையும் ஐசிசி வெளியிட்டிருந்தது. இதில், அதிக எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ”நீதிமன்றம் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கா?”- ஸ்மிருதி இரானி பேச்சுக்கு திமுக எம்.பி ஆ.ராசா பதிலடி

புதிய அட்டவணை

இந்த நிலையில், நவராத்திரி கொண்டாட்டம், காளி பூஜை பாதுகாப்பு காரணங்களை கருத்தில்கொண்டு சில போட்டிகள் நடைபெறும் தேதிகளை மாற்ற வேண்டும் என பிசிசிஐக்கு மாநில கிரிக்கெட் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த நிலையில் 9 போட்டிகளுக்கான தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி அக்டோபர் 15ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 14ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 14ஆம் தேதி நடைபெறவிருந்த இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டி அக்டோபர் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டி அக்டோபர் 12ஆம் தேதிக்கு பதிலாக 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான் அணிக்கு மூன்று போட்டிகளின் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கேரளா இல்லை.. இனி ’கேரளம்’ தான் - சட்டப்பேரவையில் நிறைவேறிய தீர்மானம்!

இந்தியா - நெதர்லாந்து அணிகள் இடையே நவம்பர் 11ஆம் தேதி நடைபெறவிருந்த போட்டி நவம்பர் 12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளதால் டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க: 'flying kiss' சர்ச்சையில் ராகுல்; பாஜக பெண் எம்பிக்களின் புகாரும் காங். தலைவர்களின் எதிர்வினையும்!