musheer khan cricinfo
கிரிக்கெட்

துலீப் டிரோபி | நட்சத்திர வீரர்களை வாயடைக்க வைத்த 19 வயது முஷீர் கான்.. 181 ரன்கள் அடித்து அபாரம்!

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிக்கான எதிர்காலத்தை ஆரோக்கியமாக மாற்றும் வகையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு பிசிசிஐ உடன் ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பை பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய்ஷா அறிவித்தார்.

Duleep Trophy

அதன்படி உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களான புச்சி பாபு கிரிக்கெட் தொடர் முதற்கொண்டு துலீப் டிராபி வரை அனைத்து தொடர்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. புச்சி பாபு தொடர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுகிறது.

அதேபோல மண்டலவாரியான கிரிக்கெட்டாக நடத்தப்பட்ட துலீப் டிராபி இந்தியா ஏ, இந்தியா பி, இந்தியா சி, இந்தியா டி என நான்கு பிரிவுகளாக மாற்றப்பட்டு அதில் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து வீரர்களும் இடம்பெற்று விளையாடுகின்றனர்.

duleep trophy captains

இந்நிலையில், துலீப் டிரோபியில் முதலாவது போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் எதிர்த்து விளையாடி வருகின்றன.

181 ரன்கள் குவித்து அசத்திய முஷீர் கான்..

முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்தியா ஏ பவுலர்கள், 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றி பேரடியை கொடுத்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 ரன்கள் அடித்தாலும், கேப்டன் அபிமன்யு 13, சர்பராஸ் கான் 9, ரிஷப் பண்ட் 7, நிதிஸ் ரெட்டி 0, வாசிங்டன் சுந்தர் 0, சாய் கிஷோர் 1 என அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். ரிஷப் பண்ட்டின் விக்கெட்டை ஒரு அற்புதமான கேட்ச் மூலம் எடுத்துவந்தார் சுப்மன் கில்.

அணியின் மற்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், மறுமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம்வீரர் முஷீர் கான் 16 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் என துவம்சம் செய்து சதமடித்து அணியை மீட்டெடுத்தார். 19 வயதான முஷீர் கானுக்கு இது மூன்றாவது முதல் தர கிரிக்கெட் சதமாகும்.

94/7 என்ற மோசமான நிலையிலிருந்து அணியை 300 ரன்களுக்கு கொண்டுவந்து வெளியேறினார். 8வது விக்கெட்டுக்கு நவ்தீப் சைனி மற்றும் முஷீர் கான் இருவரும் இணைந்து 205 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர்.

முஷீர் கான் அவுட்டாகி வெளியேறினாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நவ்தீப் சைனி அரைசதமடித்து அசத்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா பி அணி 321 ரன்களை குவித்துள்ளது.