விளையாட்டு

’இப்போதைக்கு வேண்டாம்’: கொரோனா பரவலால் தெ.ஆப்பிரிக்க டூரை ஒத்திவைத்த ஆஸ்திரேலியா

’இப்போதைக்கு வேண்டாம்’: கொரோனா பரவலால் தெ.ஆப்பிரிக்க டூரை ஒத்திவைத்த ஆஸ்திரேலியா

jagadeesh

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக அந்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருந்த சுற்றுப் பயணத்தை ரத்து செய்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில் "தென் ஆப்பிரிக்காவில் இப்போது சுகாதார நிலை மோசமாக இருப்பதாக உணர்கிறோம். அங்கு கொரோனா இரண்டாம் நிலையும், உருமாறிய கொரோனா பாதிப்பும் இருப்பதாக மருத்து அறிஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதுபோன்ற நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் செய்வதும் கிரிக்கெட் விளையாடுவதும் எங்கள் அணிக்கு பாதுகாப்பாக இருக்காது. மேலும் அது ஆபத்தானதாகவும் அமைந்துவிடும்"

மேலும் "இந்தத் தொடருக்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் நிறைய திட்டங்களையும் கடுமையான உழைப்புகளையும் கொட்டியிருக்கிறது. ஆனால் இது தொடர்பாக எங்களுடைய கருத்தையும் முறைப்படி தெரிவித்து இப்போது ஓர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அது இந்த சுற்றுப்பயணத்தை இப்போதைக்கு ஒத்திவைத்து பின்பு நிலைமை சீரானதும் நடத்தலாம் என முடிவு எடுக்கப்பட்டது. இது ஏமாற்றம் தரும் முடிவுதான். ஆனால் இதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை"

"ஜஸ்டின் லேங்கருக்கும், டிம் பெயினுக்கும் கூட இது ஏமாற்றம் தரும். ஆனால் வீரர்கள், ஊழியர்களின் பாதுகாப்பே பிரதானம் என்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது, விரைவில் கொரோனா தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்பு கலந்தலோசிக்கப்பட்டு போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்படும்" என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.