பிரபல தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜனிடம் விசாணையின்போது அவரது பாலினம் குறித்து காவல்துறை அதிகாரி கேள்வி எழுப்பியதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக சாந்தி இருந்து வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு சக பயிற்சியாளர் பாலின ரீதியாக தொந்தரவு செய்ததாக அளித்த புகாரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விசாரணையின்போது வேப்பேரி காவல் உதவி ஆணையர், சாந்தியிடம் பாலினம் குறித்து பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு தேசிய மாற்றுப் பாலின ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, புகாரின் அடிப்படையில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவ்வாறு கேள்வி கேட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.