விளையாட்டு

பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு - முதல்வர் அறிவிப்பு

Sinekadhara

பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே 2016ஆம் ஆண்டு நடந்துமுடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் மாரியப்பன். ஏழமையான வாழ்வையும், சவாலான உடல்நிலையையும் சளைக்காத தன் திறமையால் மாரியப்பன் வென்றுள்ளார். இளைஞர்களிடம் ஊக்கத்தை விதைக்கும் வகையில் பல விருதுகளைப் பெற்றுள்ளார் மாரியப்பன்.

பாராலிம்பிக்கில் அடுத்தமுறை நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன் என மாரியப்பன் உறுதியளித்திருக்கிறார். மேலும் தனக்கு அரசுவேலை வழங்கவேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாரியப்பன் கோரிக்கை வைத்திருக்கிறார்.

அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் @189thangavelu-வின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது.

சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்! pic.twitter.com/oDREUI9Efa
— M.K.Stalin (@mkstalin) August 31, 2021