world chess pt desk
செஸ்

உலகக் கோப்பை செஸ் தொடரை வெல்லப் போவது யார்? கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தாவின் பலம் பலவீனம் என்ன?

உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் மோதும் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தாவின் பலம், பலவீனம் என்ன? முந்தைய மோதல்களில் முன்னிலை வகிப்பது யார் என்பதை விரிவாக பார்க்கலாம்...

PT digital Desk

நடப்பு உலகக் கோப்பை செஸ் தொடருக்கு முன்பாக உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனும் - பிரக்ஞானந்தாவுக்கும் இடையே 19 போட்டிகள் நடைபெற்றுள்ளன. கிளாசிக் முறையில் இருவருக்கும் இடையே ஒருபோட்டி நடைபெற்றுள்ளது. அந்த போட்டி டிராவில் முடிந்தது. ரேபிட் மற்றும் ப்ளிட்ஸ் முறையில் இருவரும் 18 முறை மோதியுள்ளனர். அதில் 7 போட்டியில் மேக்னஸ் கார்ல்சனும், 5 போட்டியில் பிரக்ஞானந்தாவும் வெற்றி பெற்றுள்ளனர். 6 போட்டிகள் டிராவில் முடிந்தன.

உலகக்கோப்பை செஸ்: முதல் சுற்று டிரா ChessWorldCup2023 | Praggnanandhaa | MagnusCarlsen

முன்னதாக காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் பிரக்ஞானந்தா டை பிரேக்கர் முறையில் வெற்றி பெற்றார். அரையிறுதிப் போட்டியில் அபாரமாக ஆடிய கார்ல்சன் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஓய்வின்றி தொடர்ச்சியாக விளையாடி வரும் பிரக்ஞானந்தா அவரது வழக்கமான பாணியில் விளையாடினால் போதும், இறுதிப் போட்டியின் இரண்டாவது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தி சாம்பியனாக உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளது.