முதல் முறை செஸ் கேண்டிடேட்ஸ் பங்கேற்ற குகேஷ், இத்தொடரில் வெற்றி பெற்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய இளம் வீரர், என்ற சாதனையை படைத்துள்ளார்.
செஸ் உலகில் மிக பெரிய தொடராக பார்க்கப்படும் செஸ் candidates தொடர் கனடாவில் கடந்த 3ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த CANDIDATES தொடரில் வெற்றி பெரும் நபர் செஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெறுவதற்கான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். இந்த CANDIDATES தொடரில் வெற்று பெறுவர் தற்போதை உலக செஸ் சாம்பியனுடன் போட்டியிடுவர்.
தற்போது நடைப்பெற்றுவரும் இத்தொடரில், இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி ஆகியோர் ஓபன் பிரிவிலும், வைஷாலி மற்றும் கொனேரு ஹம்பி ஆகியோர் மகளிர் பிரிவிலும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், 13 சுற்றுகள் முடிவில் தமிழகத்தின் செஸ் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும் அமெரிக்காவின் பேபியானோ கருவானா,ஹிக்காரு நாக்கமூரா, ரஷ்யாவின் இயான் நிப்போம்னிசி ஆகியோர் 8 புள்ளிகளுடன் 2ஆம் இடத்திலும் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு கடைசி சுற்றான 14 ஆவது சுற்று நடைப்பெற்றது. இறுதி சுற்றில் குகேஷ்-ஹிக்காரு நாக்கமூராவை எதிர்த்தும், பேபியானோ கருவானா இயான்- நிப்போம்னிசியை எதிர்த்தும் விளையாடினர்.
இதில், ஹிக்காரு நாக்கமூராவை குகேஷ் வீழ்த்தினால் நேரடியாக அவர் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு தேர்வாவர் இல்லையென்றால், இப்போட்டியில் தோல்வியை தழுவுவார் என்ற இக்கட்டடான சூழல்நிலைக்கு தள்ளப்பட்டார் முகேஷ்.
இந்நிலையில், 9 புள்ளிகளை பெற்றார் குகேஷ். மறுபுறம் களம் இறங்கிய கருவானா இயான்- நிப்போம்னிசிக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில், candidates செஸ் தொடரை கைப்பற்றி வெற்றியாளராகினார் குகேஷ்.
இதன்மூலம், தனது 17 வயதான இளம் வயதிலேயே candidates செஸ் தொடரை வென்று உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
5 முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, 2013 ஆண்டுக்கு பிறகு தற்போது வரை எந்த இந்திய வீரர்களும் candidates தொடரை வென்று உலக சாம்பியன்ஷிப்பிற்கு சென்றதில்லை. இந்நிலையில், தமிழக வீரர் இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை எதிர்த்து போட்டியிட உள்ளார் குகேஷ் என்பது கூடுதலான செய்தி.