ding liren AP
செஸ்

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற டிங் லிரென்

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானின் அஸ்தானாவில் ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ம் தேதி நிறைவடைந்தது.

Jayashree A

இந்தியாவில் அனைவரும் IPL கிரிக்கெட் மேட்சை விரும்பி பார்த்து வரும் இந்நேரத்தில் செஸ் விளையாட்டில் உலக சாம்பியன்ஷிப் போட்டியானது சத்தமில்லாமல் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் வெற்றிப்பெற்ற டிங் லிரென் உலக செஸ் சாம்பியன் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

Russia's Ian Nepomniachtchi | China's Ding Liren

எதிர்பாராத உலக சாம்பியன்ஷிப் போட்டி 2023:

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானின் அஸ்தானாவில் ஏப்ரல் மாதம் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ம் தேதி நிறைவடைந்தது.

இப்போட்டியானது 2022 இல் கேண்டிடேட்ஸ் போட்டியின் வெற்றிபெற்ற ரஷ்யாவைச் சேர்ந்த இயன் நெபோம்னியாச்சிக்கும், அதே போட்டியின் ரன்னர் ஆன சீனாவைச் சேர்ந்த டிங் லிரெனுக்கும் இடையே நடந்தது.

நேபோ மற்றும் டிங் இடையே நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் சுற்றானது டிராவில் முடிவடைந்தது. 2வது சுற்றில் ரஷ்யாவை சேர்ந்த நேபோ அபார வெற்றி பெற்றார். இது டிங் லிரெனுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தோல்வியே வெற்றியின் அறிகுறி என்பது போல தனது முழு திறமையையும் வெளிபடுத்திய டிங் லிரென் 4வது சுற்றில் ஆட்டத்தை சமன் செய்தார்.

அடுத்த அடுத்த சுற்றுக்களில் இருவரும் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்ற தொடர்ந்து போட்டியிட்டனர். கிளாசிக்கல் நிகழ்வின் இறுதிச் சுற்றில் வெற்றி தோல்வி மாறி மாறி ஏற்பட்டு இறுதியில் போட்டி டிராவில் முடிந்தது.

FIDE விதிகளின்படி, விளையாட்டானது டிராவான பின்னர் அவர்கள் ஸ்கோரானது சமன் செய்யப்பட்டால், கிரிக்கெட்டில் எப்படி சூப்பர் ஓவரோ அதே போல் சதுரங்கத்தில் (Rapid )விரைவான பிரிவில் [25 நிமிடம்+10 வினாடி அதிகரிப்பு] விளையாட வேண்டும். இதிலும் இருவரும் விளையாட்டை சமன்செய்திருந்தால் அடுத்ததாக அவர்கள் Bltiz பிரிவில் விளையாட வேண்டும்.

எனவே இங்கே, கிளாசிக்கல் நிகழ்வில், அவர்கள் இறுதிச் சுற்றில் சமன் செய்யப்பட்டதால், நேபோ & டிங் இருவரும் ரேபிட் பிரிவுக்கு நகர்ந்தனர். முதல் 3 சுற்றுகள் டிராவில் முடிந்தது . 4வது சுற்றில் (ரேபிட் பிரிவில்), அவர்கள் இரண்டு முறை நகர்வுகளை மீண்டும் செய்தனர், இதனால் இந்த சுற்றும் டிராவில் முடிவடையும் அதனால் அவர்கள் பிளிட்ஸ் பிரிவுக்கு செல்வார்கள் என்று செஸ் உலகம் நினைத்தது.

ஆனால், அதிர்ச்சியான தருணம் டிங். 4வது சுற்றில் 3வது நகர்வை அவர் மீண்டும் செய்யவில்லை. இதன் பொருள் அவர் வெற்றிக்காக போராடுகிறார் என்பதாகும், இறுதியாக நாலாவது சுற்றில் நகர்வு 48ல் நேபோ தவறு செய்தார். அதை டிங் தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் . அது டிங்கிற்கு வெற்றி பாதையாக உருமாறியது. ஆம்... 4வது சுற்றில் 68 நகர்வில் நேபோ தனது விளையாட்டை ராஜினாமா செய்தார். டிங் லிரென் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

வெற்றிபெற்ற டிங் லிரென் மேக்னஸ் கார்ல்சனுக்குப் பிறகு 17 வது உலக செஸ் சாம்பியன் ஆனார்.

இது வெளிப்படையாக, நெப்போவின் இதயத்தை உடைக்கும் தருணம். இங்கு ஒருவரின் தோல்விதான் மற்றொருவரின் வெற்றியாக கருதப்படும். ஆனால் உண்மையில் நெப்போ உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அற்புதமாக விளையாடினார் .இது ஒரு அற்புதமான நிகழ்வு