விளையாட்டு

தமிழகத்தின் மற்றொரு பிரக்ஞானந்தாவாக உருவாகும் 4 வயது சிறுவன் - யார் இந்த ஸ்டீஃபன்?

தமிழகத்தின் மற்றொரு பிரக்ஞானந்தாவாக உருவாகும் 4 வயது சிறுவன் - யார் இந்த ஸ்டீஃபன்?

JananiGovindhan

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் எதிர்வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் பிரமாண்டமான சிற்பக்கலை தூண் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முதல் அடுக்கில் யானைகளும், அடுத்த அடுக்கில் மயில்களும், மேல்பகுதியில் சிங்கமுக தோற்றம் கொண்ட சிலையும் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பல ஊர்களின் பேருந்து நிலையங்களில் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்கள் மற்றும்
சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் சர்வதேச வீரர்கள், பயிற்சியாளர்கள், பார்வையாளர்கள் மாமல்லபுரத்தை ரசிப்பதற்காக அங்குள்ள இடங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

ALSO READ: 

இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னோட்ட போட்டியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற முன்னோட்டப் போட்டியில் மிகக் குறைந்த வயது போட்டியாளராக நான்கே வயதான ஸ்டீஃபன் என்ற சிறுவன் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார்.

அவருடன் புதிய தலைமுறையின் செய்தியாளர் நடத்திய கலந்துரையாடலை காணலாம்: