விளையாட்டு

பந்துவீச்சில் மிரட்டிய சிஎஸ்கே - பரிதாபமாக சுருண்ட கொல்கத்தா

பந்துவீச்சில் மிரட்டிய சிஎஸ்கே - பரிதாபமாக சுருண்ட கொல்கத்தா

webteam

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 108 ரன்கள் சேர்த்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 23வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் தொடக்க வீரர் லின் 0 (5) ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து சுனில் நரைன் 6 (5), ராபின் உத்தப்பா 11 (9), நிதிஷ் ரானா 0 (3) என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதற்கிடையே சிறிது நேரம் நிலைத்து ஆடிய சுப்மன் கில்லும் 9 (12) ரன்களில் வெளியேற, பின்னர் வந்த ரஸல் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை 100-ஐ தாண்டச் செய்தார். ஒருவழியாக 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத ரஸல் 44 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் மற்றும் இம்ரான் தஹிர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.