விளையாட்டு

தோனியின் நியூ லுக்... சென்னை சூப்பர் கிங்ஸ் ட்வீட்

webteam

தோனியின் நியூ லுக் புகைப்படத்தை பதிவிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் ட்வீட் செய்துள்ளது.

ஐபிஎல் 2020 தொடரில் சிறப்பான ஆட்டத்தை அளிக்க முடியாமல் ப்ளே ஆப் சுற்றிற்கும் முன்னேறாமல் தொடரிலிருந்து வெளியேறியது சிஎஸ்கே. ஐபிஎல் 2021 சீசன் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் வரும் 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மோதவுள்ளன. கடந்த சீசனில் சிஎஸ்கேவில் இணையாத சுரேஷ் ரெய்னா தற்போது இந்த சீசனில் அந்த அணியில் இணைந்து விளையாடவுள்ளார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் புதிய லுக் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவிட்டு ‘Baadshah Of Super Smiles’ என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளது.