விளையாட்டு

சிஎஸ்கே அணியின் பிரதான ஸ்பான்சராக எஸ்என்ஜே குழுமம் - 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்து

சிஎஸ்கே அணியின் பிரதான ஸ்பான்சராக எஸ்என்ஜே குழுமம் - 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்து

JustinDurai

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான ஸ்பான்சராக எஸ்என்ஜே குழுமம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக அளவு ரசிகர்களைக் கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளங்குகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரதான ஸ்பான்சராக எஸ்என்ஜே குழுமம் நீடிக்கும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி எஸ்என்ஜே குழுமம்  அடுத்த 3 ஆண்டுகளுக்கு (2022 முதல் 2024 வரை) பிரதான ஸ்பான்சராக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் எஸ்என்ஜே குழுமம் இணைந்து நாடு முழுவதும் சிஎஸ்கே அணியின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் பல நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்ளும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற ஜெர்சியில் இனி எஸ்என்ஜே குழுமத்தின் லோகோ இடம்பெறும். இதன்  மூலம் இந்த பிராண்ட் மேலும் பிரபலமாகும் என்று எஸ்என்ஜே குழுமத்தின்  தலைவர் எஸ்.என். ஜெயமுருகன்  தெரிவித்தார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதாக இந்த கூட்டணி அமையும் என்றும் மஞ்சள் நிற ஜெர்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்  தலைமைச் செயல் அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஐபிஎல்: குஜராத் டைட்டனஸ் தொடக்கமே குழப்பம் - முக்கிய வீரர் பங்கேற்பதில் சிக்கல்