விளையாட்டு

மெண்டிஸ் சதம் வீண்: வெஸ்ட் இண்டீஸ் சுழலில் வீழ்ந்தது இலங்கை!

மெண்டிஸ் சதம் வீண்: வெஸ்ட் இண்டீஸ் சுழலில் வீழ்ந்தது இலங்கை!

webteam

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது.

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கான முதல் டெஸ் ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில், வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்யப்பட்டது. அந்த அணியின் ஷேன் டோவ்ரிச் அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 125 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்ளேர் செய்யப்பட்டது. அதிகப்பட்சமாக கேரன் பாவெல் 88 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியின் வெற்றிக்கு 453 ரன்களை இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்.

பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்திருந்தது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் 94 ரன்களுடன் கமகே ரன்கள் எடுக்காமலும் களத்தில் இருந்த னர். கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய மெண்டிஸ், சதமடித்தார். அவர் 102 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்ரியல் பந்து வீச்சில் ஆட்டமிழ்ந்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்காததால் அந்த அணி, 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வெஸ்ட் இண்டீஸின் சுழல் பந்துவீச்சாளர்கள் ரோஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுகளையும், தேவேந்திர பிஷூ 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.  கேப்ரியல் 2 விக்கெட்டையும், ஹோல்டர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது.