விளையாட்டு

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: சிக்கிய இலங்கை கேப்டனுக்குத் தடை!

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: சிக்கிய இலங்கை கேப்டனுக்குத் தடை!

webteam

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், அதை ஒப்புக்கொண்ட இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளை யாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) உத்தர விட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. செயின்ட் லூசியாவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இலங்கை கேப்டன் சண்டிமால், பந்தைச் சேதப்படுத்தியதாக நடுவர்கள் அலீம் தார், இயான் கோல்  டு சந்தேகித்தனர். இதை சண்டிமால் மறுத்தார். இலங்கை அணி நிர்வாகமும் மறுத்தது.

இது தொடர்பாக விசாரணை ஐசிசி போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் விசாரித்தார். அப்போது, முதலி மறுத்த சண்டிமால், வீடியோ காட்சிகளை காட்டியதும் பந்தைச் சேதப்படுத்தியதாக  ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 2 சஸ்பென்ஷன் புள்ளிகளும், போட்டி ஊதியம் 100 சத வீதத்தை அபராதமாகவும் விதித்தனர். இதையடுத்து அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார்.