வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர்கள் காயத்தின் காரணமாக விலகிய நிலையில், மாற்று வீரர்களுடன் கூடிய புதிய டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடிவருகிறது. முதலில் தொடங்கப்பட்ட 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது வங்கதேச அணி. இந்நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 14ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கிறது.
2ஆவது ஒருநாள் போட்டியில் கைவிரலில் காயம் ஏற்பட்ட ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிக்கான தொடரின் முதல் போட்டியிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக உத்திர பிரதேசத்தை சேர்ந்த அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் காயம்காரணமாக தொடரை விட்டு முழுமையாக வெளியேறி இருக்கும் முகமது சமி மற்றும் ரவீந்திர ஜடேஜா இரண்டு வீரர்களுக்கும் மாற்றுவீரர்களாக நவ்தீப் சைனி மற்றும் சவுரப் குமார் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்திய அணியின் சீனியர் பவுலரான ஜெயதேவ் உனாத்கட், 2010ஆம் ஆண்டிற்கு பிறகு 12 வருடங்கள் கழித்து இந்திய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பிசிசிஐ நிர்வாகம். மற்றும் இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா அணிக்கு திரும்புவாரா இல்லை அபிமன்யூவே தொடர்வாரா என்பதை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இந்திய அணியின் விவரம்:
கேஎல் ராகுல் (கேப்டன்),
சுப்மன் கில்,
சட்டீஸ்வர் புஜாரா (துணைக்கேப்டன்),
விராட் கோலி,
ஸ்ரேயாஸ் ஐயர்,
ரிஷப் பண்ட் ( விக்கெட் கீப்பர்),
கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்),
ரவி அஸ்வின்,
அக்சர் பட்டேல்,
குல்தீப் யாதவ்,
ஷர்துல் தாக்கூர்,
முகமது சிராஜ்,
உமேஷ் யாதவ்,
அபிமன்யூ ஈஸ்வரன்,
நவ்தீப் சைனி,
சவுரப் குமார்,
ஜெயதேவ் உனாத்கட்.