சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில், முதல் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இதில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி, பி பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையயான அரையிறுதியாட்டம் கார்டிஃப் நகரில் பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்குகிறது. இதில் சொந்த மண்ணில் இங்கிலாந்து ஜொலிக்கும் பட்சத்தில் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்.
போட்டி நடைபெற உள்ள கார்டிப் நகரில் வெப்பநிலையை பொறுத்தவரை அதிகப்பட்சம் 23 டிகிரி செல்சியசாகவும் குறைந்தபட்சம் 13 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மழை பெய்வதற்கு 10 சதவிகித வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழை பெய்து ஆட்டத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனில் அது ரசிகர்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தும்.
நடப்புத் தொடரில் இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் வென்றது. ஆனால், இந்திய அணியுடனான ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும், இரண்டு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என ஆக்ரோஷமாக ஆடும். எனவே ஆட்டம், கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.