விளையாட்டு

36 ஆண்டுகளுக்குப் பின் வெண்கலம் வென்று இந்திய வீரர் சாதனை  

36 ஆண்டுகளுக்குப் பின் வெண்கலம் வென்று இந்திய வீரர் சாதனை  

webteam

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

உலக சாம்பியன்ஷிப் போட்டி தொடர் பேசில் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் ஆடவர் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சாய் பிரனீத் மற்றும் ஜப்பான் நாட்டின் கென்டோ மோமோடா விளையாடினர். இந்தப் போட்டியில் தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் வீரர் முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது செட்டை 21-8 என்று எளிதாக வென்று இந்திய வீரரை வீழ்த்தினார். 

இதன்மூலம் இந்திய வீரர் சாய் பிரனீத் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் முறையாக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அத்துடன் 1983ஆம் ஆண்டு இந்திய வீரர் பிரகாஷ் படுகோன் வெண்கலப் பதக்கம் வென்றியிருந்தார். அதனைத் தொடர்ந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.