விளையாட்டு

தியோதர் டிராபி: அசத்தினார் அக்‌ஷர், வென்றது இந்திய சி அணி!

தியோதர் டிராபி: அசத்தினார் அக்‌ஷர், வென்றது இந்திய சி அணி!

webteam

தியோதர் கோப்பைத் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் இந்திய சி அணி அபார வெற்றி பெற்றது. 

தியோதர் டிராபிக்கான ஒரு நாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் நடந்து வந்தன. இத்தொடரில் முதல் லீக் போட்டியில் இந்தியா ஏ -பி அணிகள் மோதின. இதில் பி அணி வெற்றி பெற்றது.

 அடுத்த லீக் போட்டியில், இந்தியா ஏ - சி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய சி அணி, அபாரமாக ஆடி, 3 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் குவித்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய ஏ அணி 29.5 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சி அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய ஏ அணி, வெளியேறியது.

இதற்கிடையே கடைசி லீக் போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய சி மற்றும் பி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சி அணி, 5 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. ஆல் ரவுண்டர் அக்‌ஷர் படேல் 61 பந்துகளில் 98 விளாசி ஆச்சரியப்படுத்தினார். விராத் சிங் 76 ரன்களும் தினேஷ் கார்த்திக் 34 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய பி அணி 43.4 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. 136 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய சி அணி அபார வெற்றி பெற்றது. 

பி அணியில், அதிகப்பட்சமாக தமிழக வீரர் அபராஜித் 53 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சி அணி தரப்பில் சுழல் பந்துவீச்சாளார் மார்கண்டே 4 விக்கெட் வீழ்த்தினார்.