விளையாட்டு

லஞ்சம் கொடுத்த ரியோ ஒலிம்பிக் குழு அமைப்பாளர் பணியிடை நீக்கம்

webteam

லஞ்சம் கொடுத்து ரியோ ஒலிம்பிக் போட்டி உரிமையை வாங்கிய கார்லோஸ் பொருப்புகளிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் குழுத் தலைவர் கார்லோஸ் ஆர்தர் நுஸ்மன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமையை லஞ்சம் கொடுத்து பெற்றதாக நுஸ்மன் மீது புகார்கள் எழுந்தன. இதன்பேரில் நுஸ்மனை பிரேசில் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நுஸ்மனை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இடைநீக்கம் செய்துள்ளது.