விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை டெஸ்ட் டிரா: 8 விக்கெட் வீழ்த்தினார் கேப்ரியல்!

வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை டெஸ்ட் டிரா: 8 விக்கெட் வீழ்த்தினார் கேப்ரியல்!

webteam

இலங்கை- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிராஸ் ஐஸ்லெட்டில் நடந்து வந்தது. முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் தினேஷ் சண்டிமால் 119 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் கேப்ரியல் 5 விக்கெட்டுகளையும் ரோச் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டுகளையும் ரஞ்சிதா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்திருந்தது. தனஞ்செயாவும் லக்மலும் களத்தில் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை அணி, 8 ரன்கள் கூடுதலாகச் சேர் த்து 342 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர் கேப்ரியல் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

(கேப்ரியல்)

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்தது. மழை குறுக்கிட்டதாலும் போதிய வெளிச்சம் இல்லாததாலும் 60.3 ஓவர்கள் பந்து வீசிய நிலையில் போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந் தது. இதையடுத்து போட்டி டிராவானது. ஆட்ட நாயகன் விருது கேப்ரியலுக்கு வழங்கப்பட்டது.