விளையாட்டு

தொடர்ந்து சொதப்பி வரும் சுனில் நரைன்.. ஓப்பனராக களம் இறக்குவது ஏன்?: பிராட் ஹாக் 

தொடர்ந்து சொதப்பி வரும் சுனில் நரைன்.. ஓப்பனராக களம் இறக்குவது ஏன்?: பிராட் ஹாக் 

EllusamyKarthik

பேட்ஸ்மேன், ஸ்பின்னர் என ஆல் ரவுண்டர் அவதாரம் எடுத்திருப்பவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரைன். கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடி வரும் அவர் ஓப்பனராக களம் இறங்கி பவர் பிளேயில் எதிரணியினரின் பந்துவீச்சை விளாசுவது வழக்கம். 

இருப்பினும் இந்த சீஸனில் கொல்கத்தா அணிக்காக அவர் ஃபயர் ஸ்டார்ட் கொடுக்காத நிலையில் அவர் ஏன் ஓப்பனிங் ஆட வேண்டுமென்ற கேள்வி எழுந்துள்ளது.

அதற்கு யூடியூப் சேனலில் விளக்கம் கொடுத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் சுழற் பந்து வீச்சாளர் பிராட் ஹாக்…

“சுனில் நரைன் இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால் வலது கை பவுலர்களை அவரால் கூலாக ஆட முடியும். அதே நேரத்தில் கொல்கத்தாவின் மற்றொரு ஓப்பனரான கில் வலது கை பேட்ஸ்மேனாக இருக்கிறார். இதனால் இடது மற்றும் வலது கை பேட்ஸ்மேன் காம்போவை கொடுப்பதாலும் நரைன் கொல்கத்தாவின் ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருக்கலாம். 

அவர் ஒரு பின்ச் ஹிட்டர். பல டி20 தொடர்களில் பவுலர்களை அப்ஸட் செய்த அனுபவமும் அவருக்கு உண்டு. அதனால் கொல்கத்தா அவரை தொடர்ந்து ஆதரித்து வருகிறது. 

அதே நேரத்தில் முதல் பந்திலிருந்தே பின்ச் ஹிட்டர்கள் அடித்து ஆடினால்தான் அவருக்கு அடுத்து இறங்கும் பேட்ஸ்மேன்களால் பிரெஷர் இல்லாமல் விளையாட முடியும் என்பதையும் நரைன் மாதிரியான ஹிட்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என சொல்லியுள்ளார்.