விளையாட்டு

பவுன்ஸ் ஓகே, ஸ்விங்தான் சிக்கல்: முரளி விஜய் ஒப்புதல்!

பவுன்ஸ் ஓகே, ஸ்விங்தான் சிக்கல்: முரளி விஜய் ஒப்புதல்!

webteam

ஸ்விங் பந்துகளை சமாளிப்பது அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் கடினம்தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஆறு ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி, கேப்டவுனில் நாளை தொடங்குகிறது. 

இந்திய அணி, சொந்த மண்ணில் சமீபகாலமாக நடந்த தொடர்களில் சாதித்து வருகிறது. அதே அளவில் வெளிநாடுகளில் சாதித்தது இல்லை. தென்னாப்பிரிக்காவில் தொடரை கைப்பற்றியதே இல்லை. அனைத்து விதத்திலும் இப்போது சிறப்பாக விளங்கும் இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான முரளி விஜய் கூறும்போது, ‘தென்னாப்பிரிக்க மைதானத்தில் பந்துகள் பவுன்ஸ் ஆகும் என்பது தெரியும். அதை சமாளிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், ஸ்விங் பந்துகளை சமாளிப்பதுதான் பேட்ஸ்மேன்களுக்கு கடினம். தென்னாப்பிரிக்க மைதானங்களில் நான் விளையாடி இருக்கிறேன். இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுக்குத்தான் நெருக்கடி இருக்கும் என்று முன்னாள் கேப்டன் ஸ்மித் கூறியிருக்கிறார். அது உண்மைதான். இருந்தாலும் கற்றுக்கொண்டு தொடர முடியும். மனரீதியாக தயாராக இருந்தால் சிறப்பாக விளையாட முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.