விளையாட்டு

சமனில் முடிந்த தென்னாப்பிரிக்காவுடனான பயிற்சிப் போட்டி

webteam

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன்- தென்னாப்பிரிக்கா இடையிலான 3 நாள் டெஸ்ட் பயிற்சி கிரிக்கெட் போட்டி ஆந்திராவில் உள்ள விஜயநகரத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. 2-வது நாளான நேற்று ஈரப்பதம் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது. 

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 64 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஏய்டென் மார்கம் சதம் 100 (118) அடித்தார். அத்துடன் டெம்பா பவுமா 87 (127) மற்றும் வெர்மான் பிலண்டெர் 48 (49) ரன்கள் எடுத்தனர். இந்திய கிரிக்கெட் வாரிய அணி சார்பில் தர்மேந்திரசின் ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் வாரிய அணி 64 ஓவர்கள் விளையாடி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ஸ்ரீகர் பரத் 71 (57) பியாங் பஞ்சல் (60) ரன்கள் சேர்த்தனர். சித்தேஷ் லாட் 52 (89) ரன்கள் எடுத்தார். மூன்று நாட்கள் நிறைவடைந்ததால் போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.