விளையாட்டு

செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பியான்கா !

செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் பியான்கா !

webteam

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் கனடாவின் பியான்கா ஆன்ட்ரீஸ்சு, அனுபவ வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி பட்டம் வென்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இறுதி போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் கனடாவின் பியான்கா விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பியான்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6-3, 7-5 என்ற நேர் செட்‌ கணக்கில் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸை, பியான்கா வீழ்த்தினார். 

இதன் மூலம் 19 வயதான ‌பியான்கா, அறிமுகமான முதல் அமெரிக்க ஓபன் தொடரிலேயே பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். கனடாவை சேர்ந்த ஒருவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அத்துடன் செரீனா வில்லையம்ஸ் தனது 24ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெறும் வாய்ப்பை பியான்கா தகர்த்துள்ளார். இதுவரை செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.