விளையாட்டு

ரூ.14.5 கோடிக்கு ஏலம் போன பென் ஸ்டோக்ஸ்

ரூ.14.5 கோடிக்கு ஏலம் போன பென் ஸ்டோக்ஸ்

webteam

ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை புனே அணி ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

பத்தாவது ஐபிஎல் தொடருக்கான ஏலம் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில், சர்வதேச வீரர்கள் உள்பட 351 வீரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. சட்டீஸ்வர் புஜாரா உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் பல வீரர்கள் ஏலம் எடுக்கப்படவில்லை. மதிய உணவு இடைவேளைக்கு முந்தைய நிலவரப்படி அதிகபட்சமாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.14.5 கோடிக்கு புனே அணி ஏலம் எடுத்தது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு இங்கிலாந்து வீரரான டைமல் வில்ஸை ரூ.12 கோடிக்கு பெங்களூரு அணியும், நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் பவுல்டை ரூ.5 கோடிக்கு கொல்கத்தா அணியும் ஏலம் எடுத்தன. அதேபோல தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவை ரூ.5 கோடிக்கும், ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை ரூ.4.5 கோடிக்கும் டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முருகனையும் டெல்லி அணி ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. கடந்த ஐபிஎல் சீசனில் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டர் பவன் நெஜியை ஒரு கோடி ரூபாய்க்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது. இதுதவிர, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் முதல் ஆப்கானிஸ்தான் வீரராக முகமது நபியை ஹைதராபாத் அணி ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. 18 வயதான மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானை ரூ.4 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது.