தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.வி.எஸ். லட்சுமணன் நியமிக்கப்பட உள்ளதாக வெளியான தகவலை உறுதி செய்துள்ளார் கங்குலி.
பெங்களூருவில் இயங்கிவரும் தேசிய கிரிக்கெட் அகாடமி, இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடற்தகுதியை கையாண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் நடப்பு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக இருந்தார்.
ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் ஆனதால், முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் இத்தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் கங்குலி இன்று உறுதி செய்துள்ளார். இதையடுத்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.வி.எஸ். லட்சுமணன் பொறுப்பேற்க உள்ளது உறுதியாகியுள்ளது.