விளையாட்டு

வேகமெடுக்கும் ஒமைக்ரான் : தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் குறித்து பிசிசிஐ முக்கிய முடிவு

வேகமெடுக்கும் ஒமைக்ரான் : தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் குறித்து பிசிசிஐ முக்கிய முடிவு

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. வரும் 17-ஆம் தேதி முதல் ஜனவரி 26-ஆம் தேதி வரையில் மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது இந்தியா. 

இந்த நிலையில் இந்த சுற்றுப்பயணத்தை ஒரு வாரம் தள்ளி வைக்கும் படி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை அணுக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை வேண்டுகோளாக அந்த நாட்டு வாரியத்திடம் பிசிசிஐ கேட்க உள்ளதாக தகவல்.

அதே நேரத்தில் இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ள மூன்று டெஸ்ட் போட்டியை இரண்டாக குறைக்கவும், பயோ பபூள் நடைமுறையை கடுமையாக்கவும் பிசிசிஐ கேட்க உள்ளதாம். 

இந்தியாவின் கோரிக்கையை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டால் இந்த சுற்றுப்பயணத்தின் மாற்றி அமைக்கப்பட்ட புதிய அட்டவணை விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதன்பிறகு இந்திய அணியின் பயணம் இருக்கும் என தெரிகிறது. டி20 தொடர் 5 போட்டிகளாக மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாம்.

தென்னாப்பிரிக்க நாட்டில் முதன்முதலில் ஒமிக்ரான் திரிபு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.